கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு எப்போது?

‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து இவர், கமல்ஹாசன் நடிக்க, ‘இந்தியன்-2’ படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வருவதால், இந்தியன்-2 படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருக்கும்.

‘‘அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், ‘இந்தியன்-2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிப்பார்’’ என்று டைரக்டர் ஷங்கர் கூறினார்.

Related posts