உன்னதத்தின் ஆறதல்! வாரம் 21. 5

உனது தெரிந்தெடுப்பு.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
… ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ

ஜீவனைத் தெரிந்து கொண்டு .. உபாகமம் 30. 19

மாறி மாறி பிரட்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையே சலித்து விட்டது இது அநேகருடைய மனஆதங்கம். மறுபுறத்தில் பிரட்சனைகளும் கஸ்டங் களும் மாத்திரமே நமது கண்களுக்குத் தெரிகிறது என்பதுதான் எமது பிரட்சனை என்றும் சொல்லலாமே. உலகம் பாவத்தில் விழுந்திருந்தாலும், நமக்காக வைக்கப்பட்டள்ள நன்மைகள் எதையும் தேவன் அகற்றிப் போடவில்லை. அப்படி யானால் நமது பிரட்சனைகளுக்கும் தோல்விகளுக்கும் முக்கிய காரணம் நமது தவறான தெரிந்தெடுப்பே என்றால் மிகையாகாது.

எந்தவொரு விடையத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதில் நமது தெரிந் தெடுப்புதான் என்ன? வெளிநாடு செல்ல முழுவீச்சாக புறப்பட்ட ஒருவன், பிரயாணம் சரிவாராது விட்டதால் மனமுடைந்து மறுபடியும் பல இலட்சங்களைச் செலவு செய்ய தயாராகிறான். இன்னொருவன் வெளிநாடு தடைப்பட்டதும் உள்நாட்டில் நல்லதும் தனக்குத் தகுந்ததுமான ஒரு வழியைத் தெரிந்து கொண்டு முயற்சித்தான். நுல்ல நிலைக்கு உயர்ந்தான். வித்தியாசத்தைக் கவனித்தீர்களா!

நமது வாழ்க்கைப் பாதையில் நாம் தோல்விகளைச் சந்திக்கலாம். ஆனால் அதற்குள் மாண்டுபோகக்கூடாது நமது தெரிந்தெடுப்பிலுள்ள சிறிய, பெரிய தவறுகளை சரிசெய்து முன்னேறிச் செல்வதுதான் வாழ்வில் வெற்றியைத்தருகிறது. நன்மை தீமை, ஜீவன் மரணம் இப்படி யோடி யோடியாக நமக்கு முன் தேவன் வைத்திருந்தாலும், தெரிந்தெடுக்கும் உரிமையை அவர் நம்மிடம் விட்டுவிட்டாலும், அவர் நம்மேல் கண்iணை வைத்து நமக்கு ஆலோசனை சொல்லும் தேவன். நீயும் உன் சந்ததியும் நன்றாய் வாழ்வதற்கு நன்மையை, ஜீவனைத் தெரிந்தெடு என்று நல் ஆலோசனை தருகிறார்.

அன்று யூதாவுக்கு, தேவன் ஒரு தெரிந்தெடுப்பையும், கூடவே நல்ஆலோசனை யையும் கொடுத்தார். பாபிலோன் ராஜா சிறைபிடிக்கும்போது, அவனோடு புறப்பட்டுப் போகிறவன் பிழைப்பான், மாட்டேன் என்று நகரத்திலே தங்கிவிடுகிறவன் அழிவான். இறுதியில் எதைத் தெரிந்தெடுப்பது? சுpறைபிடிக்கப்படுதல் தோற்றுப்போன மன நிலையைக் கொடுக்கிறது. மனுசீகம் அதற்கு இடம்கொடாது. ஆனால் கர்த்தரோ அதுவே பிழைக்கும் வழி என்றார். அப்படியே சிறைபிடிப்பு வந்தபோது எதிர்ப்புத் தெரிவிக்காமல் போனவர்கள் திரும்பவும் யூதாதேசத்திற்குள் வந்தார்கள். தவறான தெரிந்தெடுப்பைச் செய்தவர்களோ அழிந்து போனார்கள்.

தேவனுக்கு பிரியமான அலைகள் வாசகநேயர்களே, கர்த்தருடைய வார்த்தை எதைச் சொல்கிறதோ அதை அப்படியே செய்ய வேண்டியதே நமது தெரிந்தெடுப்பாக இருக்கட்டம். சுயமாக வழிகளை தெரிந்துகொண்டு இதுவரை அனுபவித்த இன்னல்கள் போதும். இந்த புதிய மாதத்தில் இருந்து தேவ ஆசீர்வாதத்தோடும், சுபீட்சத்தோடும் வாழ தேவன் கிருபை செய்வாராக!

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts