தந்தை எஸ்ஏசியுடன் விஜய் மீண்டும் மோதல்

புதிதாக கட்சி தொடங்கும் நடவடிக்கையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஈடுபட்டுள்ளதால், எஸ்ஏசி - மகன் விஜய் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சியை தொடங்க முடிவெடுத்தார். இதற்கான அறிவிப்பை வரும் 14-ம் தேதி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்ஏசி ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்தபோது, விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்று அறிவித்தார். எஸ்ஏசி நியமித்த நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார். தனது இயக்கத்தின் பெயர், கொடி, புகைப்படம் உள்ளிட்டவற்றை சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தினால்…

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள்..

ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர் ராஹ்மான் இன்று தனது 53- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இசைத்துறையில் ரஹ்மான் புகுத்திய புதுமைகளை பற்றி தற்போது பார்க்கலாம். 40-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் அது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஒரு 25 வயது இளைஞனுக்கு..அதுவும் தான் இசையமைத்த முதல் படத்திற்கு வழங்கப்படுகிறது. அப்படி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை புயல் என்ற பெயர் கிடைத்ததில் ஆச்சர்யமில்லை. தேசிய விருதுக்கான இசையமைப்பாளரை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் தமிழ் இயக்குனர் பாலு மகேந்திராவும் இருந்தார். தேவர் மகன்…

கஸ்தூரி எதிர்ப்புக்கு நடிகை குஷ்பு பதிலடி..

தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி வழங்கியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தநிலையில், அவருக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி இருந்த நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தற்போது 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதற்காக திரைப்பட சங்கங்களும், நடிகர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது. ஒரு சினிமாக்காரியாக நான் யோசிக்கவில்லை. இப்போது கொரோனா வைரஸ், சீனா வைரஸ் என்று அழைக்கிறோம். அது சினிமா வைரஸ் என்ற பெயரை எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை முதல்-அமைச்சரும், நடிகர்களும், தியேட்டர் அதிபர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா பரவி மீண்டும்…

13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வேண்டுகோள்

இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுடன் பேச்சு நடத்தினார்.அப்போது, சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலங்கை கடமைப்பட்டுள்ளதை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது கொரோனா தொற்றுநோய் இரு தரப்பினருக்கும் இன்னும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என கூறினார். கொழும்பில் ஜெய்சங்கருடனான சந்திப்புகளின் போது கொரோனா தடுப்பூசி பெற இலங்கை தலைமை முறையாக இந்தியாவிடம் உதவியைக் கோரி உள்ளது.

கொவிட் 19 தடுப்பூசியை பெற அமைச்சரவை அங்கீகாரம்

சுகாதார அமைச்சர் பவித்திராவுக்கு அனுமதி கிடைத்தது கொவெக்ஸ் (COVAX Facility) வசதியின் கீழ் கொவிட் - 19 க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை (04) ந​ைட பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியை தயாரித்த பின்னர் தடுப்பூசியை சமமாக நாடுகளுக்கிடையே விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களும் உற்பத்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய உலகளாவிய அணுகுமுறையே கொவெக்ஸ் (COVAX Facility) என அழைக்கப்படுகின்றது. அதன் கீழ் கொவிட் - 19 இற்கான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதுடன் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பெற்றுக்கொள்வதற்காக நியாயமானதும் சமமானதுமான அணுகுமுறை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையும் இந்த கொ​ெவக்ஸ் Facility செயன்முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கொவக்ஸ் வசதிகள் மூலம்…

கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய…