ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என பைடன் கூறினார். ஜோ பைடனின் பெருந்தன்மைக்கு இதுவே சான்றாக அமைகிறது. ‘குடைபிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related posts