அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் ஈரான் உச்ச தலைவர் கிண்டல்

ஆக என்ன ஒரு காட்சி! அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கிண்டல் செய்து உள்ளார்.

டிரம்பை இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தலாமா அல்லது அவருக்கு பதிலாக பிடனை பதவியில் அமர்த்தலாமா என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர். சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த் நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வியாழக்கிழமை அமெரிக்காவில் தேர்தல் நாளின் பின்னர் ஏற்பட்ட மோசமான சம்பவங்களை கேலி செய்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இந்த வாக்கெடுப்பு அமெரிக்க ஜனநாயகத்தின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆக என்ன ஒரு காட்சி!” “அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் மோசடியான தேர்தல் என்று ஒருவர் கூறுகிறார். யார் அதைச் சொல்கிறார்கள்? தற்போது பதவியில் இருக்கும் அதிபர் டிரம்ப் தேர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக அவரது போட்டியாளர் கூறுகிறார்! #அமெரிக்க தேர்தல் & அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் என அவர் கூறி உள்ளார்.

Related posts