கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்

டூயட் காட்சிகளை தவிர்ப்பேன் என்றும் கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன் என நடிகர் யோகி பாபு கூறினார். திரையுலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும்? என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதற்கு சமீபகால உதாரணம், யோகி பாபு. துணை நடிகராக பல படங்களில் தலையை காட்டிய இவர் இப்போது, முன்னணி நடிகராகி விட்டார். நகைச்சுவை நடிகராக இருந்தவர், ‘கதைநாயகன்’ ஆகிவிட்டார். அப்படி இவர் கதைநாயகனாக நடித்த ‘பேய் மாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. படத்தின் டைரக்டர் சக்தி சிதம்பரம் வரவேற்று பேசினார். விழாவில் யோகி பாபு பேசியதாவது:- “நான், நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடிப்பேன். கதாநாயகனாக ‘டூயட்’ பாட மாட்டேன். அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன். கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன். என் முகம் நகைச்சுவை வேடங்களுக்கு…

விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல

விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். நடிகர் ராஜ்கிரண் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “தம்பி விஜய் சேதுபதி ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர். நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப் பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்போது அதில் இருந்து விலகி விட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது, தமிழரின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது. தமிழ் பண்போடு வாழ்ந்து…

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர் !

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார். இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதியின்…

மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கன்னட திரையுலகில் இளம்நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா(வயது 39). இவர் நடிகை மேக்னா ராஜின் கணவர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜா, பிரபல நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த ஜூன் 7 தேதி மாதம் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 39 வயதே ஆன அவரது மரணத்தால் கன்னட திரையுலகம் சோக கடலில் மூழ்கியுது. அதன் பிறகு அவரது உடலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கனகபுரா ரோட்டில் உள்ள பண்ணை வீட்டு…

மக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டம்

கொட்டாஞ்சேனை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (22) மாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------ முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 5 ஆவது நாளாக இன்று (22) ஆஜரானார். இதற்கு முன்னர் அவர் கடந்த 17 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது தடவையாக ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.…

இரட்டை குடியுரிமை குறித்து ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பட இணங்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த வருடத்திற்குள் கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமையை உடையவர்களுக்கு பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்ற அதிகாரமுடைய ஏனைய பதவிகளை வகிப்பதற்கும் உள்ள உரிமை உறுதிச்செய்யப்படும் என்ற சரத்து நிச்சயம் சேர்க்கப்படும் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதாதத்தை அடிப்படையாக கொண்டே மேற்குறித்த தீர்மானத்திற்கு வந்தாகவும் விமல் வீரவங்க தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் அந்த சரத்து நிச்சயம் உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ´நீதியமைச்சர் அலி சப்ரியால் பாராளுமன்றில் முன் வைக்கப்படவுள்ள பதிலளிக்கும் அறிக்கையில் அந்த விடயம்…