விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே

விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது அவர்களின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷதெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையானது எந்தவொரு அதிகாரத் தரப்புடனும் இணையாத அணிசாரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

75ஆவது பொதுச் சபையின் பொது விவாதத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் எனவும் அது அந்தந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின்அரசாங்கங்கள் தங்கள் மக்களின் துடிப்பு மற்றும் தேவைகளை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts