உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 36

இரக்கமுள்ள தேவன்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்த்தமாவான். மத்.8;:8

நம்பிக்கை என்பது, நன்மையைக் கண்டுகொள்ள ஓர் ஏணி என்று வயசானவர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை அனுபவித்தவர்கள் ஒருசிலர். காரணம் உலகத்தையும், அதன் நன்மைகளையும் நம்புபவர்கள் முழுமையாக அதன் பிரதிபலன்களை அடைந்து கொள்வதில்லை.

தேவன்பேரில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. ரோமர் 9:33 அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்ப டுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. இந்த உண்மையை விளங்கிக்கொள்ள நாம் மத்தேயு.8:5-10 வரை வாசித்து தியானிப்போம்.

இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நு}ற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து, ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு, நான் வந்து அவனைச் சொஸ்த மாக்குவேன் என்றார். நு}ற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக, ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு, நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிற வர்களை நோக்கி, இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நூற்றுக்கு அதிபதி (100 போர்வீரருக்கு பொறுப்பான அதிகாரி) தனது அதிகாரத்தையும், அந்தஸ்த்தையும் நினைத்துப்பார்க்கும்போது ஓர் குறைவைக் கண்டான். அந்த குறைவிற்கான நிறைவை அவன் இயேசுவிடம் கண்டான். அது மட்டுமல்ல இயேசு ரோமஅரசிற்குகீழ்ப்பட்ட ஓர்யூதன் என்பதையும்பொருடபடுத்தாமல் அவரை நாடினான். அவனிற்கு வைத்தியம்செய்ய பலபெரிய வைத்தியர்கள் இருந்திருக்கலாம். அதிகளவு பணமும் இருந்திருக்கலாம். யாருக்காக இயேசுவை நாடினான்? தனக்காக அல்ல. தன் வீட்டுக்காரருக்காக அல்ல. தனது வீட்டு வேலைக்காரனுக்காக அவரை நாடினான். காரணம் அவன் தன் வேலைக்காரன் நோயினால் படும்வேதனையை, துன்பத்தை அவனால் பெறுக்க முடியவில்லை. வேலைக்காரன் என்று உதாசினம் செய்யக்கூட முன் வரவில்லை. இயேசுவின் மூலம்தான் இந்த நோயில் இருந்து விடுதலை பெறமுடியும் என நம்பினான். அந்த நம்பிக்கை அவனுக்கு விசுவாசமாக மாறிற்று அந்த விசுவாசம் அவனின் வேலைக்காரன் சொஸ்த்தமடைய ஏதுவாயிற்று. அதிலிருந்து நாம் விளங்கிக்; கொள்ளவேண்டியது, அவனின் தேவை மெய்யாகவே இயேசு என்று.

அந்த அதிபதி தனது தேவையை இயேசுவிடம் கூறியபோது, அவர் தாமாகவே அவனது வீட்டிற்கு வர ஆயத்தமானார். அது மட்டுமல்ல தாமே வந்து அவனை குணமாக்குவேன் என்று கூறினார். ஆனால் அவன் கூறியபதில், நு}ற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக, ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். அந்த அதிபதிக்கு, நமது ஆண்டவரின் வார்த்தை ஒன்றே போதுமானதாக இருந்தது. இன்று நமக்கு போதும் என்று சொல்லும் அளவிற்கு தேவனின் வார்த்தைகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல போதும் என்ற அளவிற்கு தேவனின் வாக்குத் தத்தங்களும் அருளப்பட்டு உள்ளன. ஆனால் நாம் எம்மைத் தாழ்த்தி அவற்றை எமது அன்றாட வாழ்வில் அனுபவிக்க முடியாமல் இருப்பது மிக வேதனைக்குரியது. வேதம் சொல்கிறது, தேவன் சிறுமைப்பட்டு தன்னைநோக்கி கூப்பிடுகிறவர்களின் சத்தத்தைக்கேட்டு அவர்கட்கு பதில் அளிக்கிறவர் என்று. இதை நாம் சங்கீதம் 10:17 காணலாம். கர்த்தாவே, சிறுமைப் பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் என்று.

தேவனுக்குப்பிரியமான மக்களே, மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் இருந்து நாம் வெளிப்படையாக காணக்கூடியதாக இருப்பது தாழ்மை என்பதாகும். நாம் நம்மைத் தாழ்த்தும்; வரையிலும் இயேசு நமக்கு போதுமானவர் என்பதை உணரவே முடியாது. நாம் நம்மைத் தாழ்த்தும்போது தேவன் நமக்கு போதுமானவராக இருப்பார். நாம் நம்மை தாழ்த்த மனதற்ற நிலையில் இருந்தால், எப்படி நமது ஆண்டவரை போதுமானவராக நமது வாழ்வில் காணமுடியும்.

நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் தேவன் நமக்கு போதுமானவராக நாம் கருதாதபடியால், எமது குறைவுகளில் அங்குமிங்குமாக அலைந்து திரிகிறோம். அதுமட்டுமல்லாமல் தேவனிடத்தில் இருந்து எந்த நன்மையையும், ஆறுதலையும் அடையமுடியாமல் தவிர்ப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நமது அன்பான தேவன், மக்கள் தன்மேல் விசுவாசம் வைத்து, அதன் மூலம் தம்மை, தனது வல்லமையை மக்கள் தம்வாழ்வில் அனுபவித்து சுபீட்சமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார். தம் வார்த்தையின் வல்லமை நமது வாழ்வில் சகல குறைவுகளிலும் நிறைவைத்தரும் ஓர் நதியாக பாய்ந்து ஓடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆகவே நாம் நம்மைத்தாழ்த்தி, நமது வாழ்வின் இம்மையிலும், மறுமையிலும் நமது குறைவுகளை நீக்கி, நமக்குப் போதுமானவராக தேவன் இருக்க, அவர் வார்த்தையை நம்பி, அவரைப்பற்றிக் கொள்வோம்.

இந்த வார்த்தையில் உள்ள வல்லமையால்வரும் நன்மையை நீங்கள் யாவரும் அடையவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதை நானும் அடைந்து ஆறுதலைக் கண்டுகொள்ள விரும்புகிறேன் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த ஜெபத்தை ஒன்று சேர்ந்து முழுமனதோடு ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் பரலோகபிதாவே, இன்று உமது வார்த்தையில் உள்ள வல்வமையை அறியும்படியாகன ஓர்வேளையை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. இந்த உம்முடைய வார்த்தையில் உள்ள வல்லமையை நான் அறிந்து, அடைந்து கொள்ளும்படியாகவும், உம்மில் விசுவாசம் வைக்கக்கூடியதாக என் இருதயத்தை உமதண்டை திருப்பியருழும். முற்று முழுக்க என்னை தாழ்த்தி உமதண்டை ஒப்புக்கொடுக்கிறேன் பிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts