இங்கிலாந்து பர்கிங்ஹாம் சிட்டியில் கத்திக் குத்து

இங்கிலாந்து பர்கிங்ஹாம் சிட்டியில் கத்திக் குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை.

இது குறித்து வெஸ்ட் மிட்லான்ட்ஸ் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “ பர்மிங்காம் சிட்டி சென்டரில் தாக்குதல் நடந்து இருப்பதாக எங்களுக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் நிகழ்விடத்திற்கு சென்ற போது, மேலும் சிலர் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது.

எத்தனை பேர் காயம் அடைந்தனர் எங்களுக்கு தெரியும். எனினும், இந்த தகவலை நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது. காயம் அடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் அனைத்து அவசர சேவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

மிகப்பெரிய சம்பம் என்று கூறியுள்ள மிட்லான்ட்ஸ் போலீசார், மக்கள் அமைதி காக்க வேண்டும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள போலீசார், என்ன நடந்தது என்பதை அறிவிக்க எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும் என்றனர். மேலும், குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts