இன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020

இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரை 96 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

—–

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 10 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 477 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

—–

இலங்கை போக்குவரத்துச் சபையில் பணி புரியும் அனைத்து சாரதிகள், நடத்துனர்களினதும் விடுமுறை இன்று (26) முதல், மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துகளை முன்னெடுக்க இன்றையதினம் (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இ.போ.சபைக்குச் சொந்தமான 5,000 இற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை இன்றையதினம் முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக, அதன் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக ஸ்வர்ணகங்ச தெரிவித்தார்.
இதேவேளை, இன்றையதினம், கொழும்பிற்கு வருவதற்காக 27 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

Related posts