1 லட்சம் முருக பக்தர்கள் தயாரிக்கும் பக்தி படம்!

1 லட்சம் முருக பக்தர்கள் சேர்ந்து பக்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பக்தி படங்கள் எடுப்பது மிகவும் குறைந்து வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்குப்பின், நயன்தாரா கதைநாயகியாக நடிக்கும் ஒரு பக்தி படம், ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ‘அரோகரா’ என்ற பெயரில் மேலும் ஒரு பக்தி படத்துக்கு பூஜை போடப்பட்டுள்ளது. இது, முருக கடவுளை பற்றிய பக்தி படம். ஒரு லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். ‘தொட்ரா’ என்ற படத்தை இயக்கிய டி.மதுராஜ் டைரக்டு செய்கிறார். புதுமுகங்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நடைபெற இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் டி.மதுராஜ் கூறுகையில், ‘’1980, 2000, 2020 என மூன்று காலகட்டங்களில் நடப்பது போல்…

சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் தங்கள் எல்லையில், அதிக சக்தி கொண்ட விமானம் தாங்கி போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இறக்கி வருகின்றன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது. லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது. அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான…

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதேவேளை யாழ். ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.

100 பேர் கொண்ட போர்ப்ஸ் வருட வருமானப் பட்டியல்

கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் உலகளவில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் முழுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் என இரு தரப்பிலும் உள்ளவர்களைக் கொண்டு இந்த 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பட்டியலில் முதல் முறையாக டென்னிஸ் பிரபலம் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ரூ. 803 கோடி வருமானம் ஈட்டி இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஃபெடரர். 100 பேர் கொண்ட…