யாழில் பொலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 1990 காவு வண்டி ஊடாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.

பலர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்த நிலையிலேயே தமது வீடுகளில் தங்கி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் பொலிஸார் தம்மிடம் வந்ததாகவும் தங்களுடைய கன்ரர் வாகனத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டதாகவும், அதற்கு அந்த வீட்டுக்காரர்! வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் உரிமையாளரை கொண்டுவரமுடியாது.

என்றும் அவரை அழைத்து வந்தால் மீண்டும் ஏன் தற்போதைய கன்ரர் பாவனையாளர் கோரியிருக்கின்றார்.

ஏன் இவ்வாறு விசாரிக்கின்றீர்கள் ஏன்று பொலிசாரிடம் வாகன பயன்பாட்டாளர் கேட்டிருக்கின்றார்.

உங்களுடைய கன்ரர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக யாரோ அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த வாகன பயன்பாட்டாளர் சேர் நீங்கள் எங்கள் வாகன ஏஞ்சின் தொட்டுப் பாருங்கள் சூடாகவா இருக்கு என்று.

இவ்வாறு பொலிசார் தர்க்கப்படுவதை சிறுவன் ஒருவன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றான்.

இதனை அவதானித்த பொலிஸார் அந்த கைத்தொலைபேசியை பறித்து எடுத்திருக்கின்றார்கள்.

இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு கைத்தொலைபேசி உரிமையாளர் கேட்டபோது அதனை ஏற்க பொலிசார் மறுத்த நிலையில் உறவுகள் ஒன்று கூடி பொலிசாருடன் முரண்பட்ட நிலையில் குறித்த நபரின் தொலைபேசியை ஒப்படைத்து சென்றிருக்கிறார்கள்.

இன்றைய தினம் மீண்டும் குறித்த கிராமத்திற்கு வருகைதந்த பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த சிறுவன் உட்பட பலரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.

தற்போது மூவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்ப்பட்டிருக்கின்றனர்.

பலர் தலை, பல், பிடரி உட்பட உடலின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு பொலிசாருக்கு பயத்தில் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை பொலிஸார் குறித்த மக்களை கஞ்சா கசிப்பு போன்றவற்றை வைத்து உங்களை கைது செய்வதாகவும் மிரட்டியிருக்கிறார்கள்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்க்கும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்திருக்கிரதார்கள் தற்போது மாளிகை திடல் கிராமத்தில் ஒரு பதட்டமான சூழல் காணப்படுகிறது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts