இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் இன்றைய 24.03.2020 உத்தியோகபூர்வ செய்திகள்..

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 311 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லை என்பது கண்டறியப்பட்டதையடுத்து இவர்களை தங்களின் குடுப்பங்களுடன் ஒன்றினைக்கும் பணி இன்று இரானுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டது

பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மாத்தறைக்கும், இரண்டு பஸ்கள் மூலமாக கொழும்புக்கும், கண்டிக்குமாக இவர்கள் 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக எமது மட்டக்களப்பு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேயர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

——-

கொவிட் 19கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற் கொள்ளும் போது கொழும்பு,கம்பஹா,களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிகவும் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

இம் மூன்று மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவு ஒன்றுகூடியிருந்தமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

எனவே எதிர் வரும் காலங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சதொச,கீல்ஸ்,லாப்ஸ்,ஆபிகோ,புட் சிடி,அரலிய,நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிலையங்கள் இப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்படும்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செயலணி ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வேறு அதிகாரிகள் இச்செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

இதற்குப் பின்னர் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள்,மருந்துப் பொருட்கள்,எரிவாயு,ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை (25) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

லொறி,வேன்,முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கில் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்திகொள்ளும் அனைத்து வழங்கள் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளது.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.24

——–

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி,மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ்,ரொஷான் குணதிலகநியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.24

——-

கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் சற்று முன்னர் இதனை அறிவித்தது.
இந்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுத்த இருந்தமை குறிப்பிடத்தக்கது.

—–

கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று (24); திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது 27ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.
இந்த எட்டு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாட்டங்ளில் தற்போது நடைமுறையுள்ள ஊரடங்கு உத்தரவு 27ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.
விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related posts