சமூக இடைவெளி என்பது மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ என அச்சம்

சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். மேலும், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். மேலும், அப்படி வந்தாலுமே கடைகளில் இடைவெளி விட்டு நிற்கச் சொல்லி கோடுகள் எல்லாம் போட்டு, கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வழிவகை செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் மில்டன். அதில் அவர் கூறியிருப்பதாவது: "சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை…

தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை: சூரி உருக்கம்

கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை என்று சூரி தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர் சூரியும் தன் குழந்தைகளுடன் இணைந்து பேசி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரும், அவரது குழந்தைகளும் பேசியிருப்பதாவது: மகள் வெண்ணிலா: வணக்கம். நாங்கள் சின்ன பசங்கதான். நாங்கள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள். கரோனா வைரஸால் நிறையப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதனால் நிறையப் பேர் இறந்துள்ளனர். மருத்துவர்களும் காவல்துறையினரும் இணைந்து இதைத்…

தேவையா இந்தக் காழ்ப்பு? சமுத்திரக்கனி!

ட்விட்டரில் யார் எதற்காக ட்ரெண்ட் ஆவார்கள் என்றே கணிக்க முடியாது. அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும் விஷயங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் பிரபலங்களுக்கே திடீரென்று நாம் ஏன் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் என்பது புரியாது. அந்த அளவுக்கு ட்விட்டர் வைரல் ட்ரெண்டிங் என்பது ஒரு புரியாத புதிர் விளையாட்டுதான்ட்ரெண்ட் ஆன சமுத்திரக்கனி ஆனால் இந்த விளையாட்டால் சில நேரம் சுவாரஸ்யமும் கிடைப்பதுண்டு. விளையாட்டு வினையாகிப் போவதும் உண்டு. கடந்த ஆண்டு திடீரென்று வைரலான #prayfornesamani ஹேஷ்டேகை சுவாரஸ்யமான உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் தற்போது நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியை வைத்து உருவாக்கப்பட்ட ட்வீட்களும் மீம்களும் ட்ரெண்டாகி வருவது விளையாட்டு வினையான கதையாகிக் கொண்டிருக்கிறது. சமுத்திரக்கனியின் திரைப்படங்களை மட்டுமல்லாமல் அவருடைய பெயரை வைத்தும் உருவத்தை மார்ஃப் செய்து பயன்படுத்தியும் பல மீம்கள் வைரலாகப் பரவிவருகின்றன. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகை உலுக்கிவரும் வேளையில் இந்தியாவில் ஏப்ரல்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிதி மற்றும் பொருள் நிவாரணங்கள்

புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல நிதி மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக ரூபா 5,000 இனை வழங்குவதன் மூலம் அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார கஷ்டங்கள் தணியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. அது, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…

வறியோருக்கு உணவு வழங்க ஆலயங்கள் முன்வர வேண்டும்

ஆலயங்களில் சமய நிகழ்வுகளுக்கு, திருவிழாக்களுக்கு என ஒதுக்கிய நிதியினை தினம் உழைத்து வாழ்பவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு பயன்படுத்த முன் வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் வணக்கத்தலங்கள் அனைத்தினதும் தர்மகர்த்தாக்களிடமும், மதத் தலைவர்களிடமும், வழிபாட்டாளர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள். இன்று வணக்க தலங்களில் நடைபெற வேண்டிய வருடாந்த திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன. யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாகவுள்ளது. சமயச் சடங்குகளுக்காகப் பாவிக்கவிருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதேநேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள், தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக்…

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 785,715 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,814 பேர் உயிரிழந்துள்ளனர். 165,606 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும். சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது. ஏனெனில் சீனாவில்…

இலங்கை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். நீர்க்கொழும்பு, போருதொட பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருதய நோய் என்று கூறி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 106 ஆகும். மேலும், கொரோனா அறிகுறிகளுடன் 114 பேர்…