12 வருடங்களுக்கு முன்பு நான் காதலித்த நபர்

2008-ல் நான் ஒருவரைக் காதலித்தேன். பிறகு வேறுவழியில்லாமல் இருவரும் பிரிய நேர்ந்தது என நடிகை அனுஷ்கா பேட்டியளித்துள்ளார். பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் வெளியான செய்தி - தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்கிறார்! மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின. பிரகாஷ் கோவலமுடி 2004-ல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன். இந்நிலையில் பிரபாஸுடனான காதல், தேசிய விருது பெற்ற இயக்குநருடன் திருமணம் என சமீபத்தில் வெளியான கிசுகிசுக்களுக்கு…

கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து

கரோனா வைரஸ் தொற்றுக்கு (கொவைட் -19) தோற்றுவாயான சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு ஜப்பானின் காய்ச்சல் மருந்து பெரும் மீட்க உதவியதாக சீனா அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. இத்தாலியில் இதுவரை 35,713 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,978 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனா்.மக்கள்…

தூக்கில் போடும் முன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் அக்‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத் தண்டனை கைதியின் மனைவி, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக் கொடுங்கள்’ என்று பிஹார் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் மனு செய்துள்ளார். மார்ச் 20ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கணவன் சாவுக்குப் பிறகு தான் விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை எனவே தூக்குத் தண்டனைக்கு முன்பே அக்‌ஷய் குமார் சிங்கிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கித் தருமாறு கோர்ட்டில் அவர் மனைவி மனு செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் மார்ச் 19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா கூறும்போது,…

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘பாரஸைட்’

உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ‘பாரஸைட்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இயக்குநர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் தென் கொரியப் படமான ‘பாரஸைட்’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதுகள், கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றது. சமூக ஏற்றத்தாழ்வை சிறப்பான முறையில் படமாக்கியிருந்த இயக்குநர் பாங் ஜூன் ஹோவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் இப்படம் வெளியான 2 மாதங்களுக்குப் பிறகு அமேசான் ப்ரைமில் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் இப்படத்தை கொரிய மொழியில் மட்டுமின்றி இந்தி டப்பிங்கிலும் பார்க்க…

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? படக்குழு விளக்கம்

விஜய்யின் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மாஸ்டர் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். டப்பிங், ரீ-ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் படம் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்றும், இணைய தளங்களில் ஏற்கனவே தகவல் பரவி ரசிகர்களுக்கும், வினி யோகஸ்தர்களுக்கும் குழப் பத்தை ஏற்படுத்தியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் ஸ்டூடியோக்களில் விறுவிறுப்பாக நடக்கிறது என்றும், படம் ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகும் என்றும் அறிவித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் அடியோடு முடிங்கி உள்ளது. திரையரங்குகளை வருகிற 31-ந்தேதி வரை மூட…

ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல் நடிகை நமீதா புகார்

தன்னை மிரட்டிய நபரின் புகைப்படத்தை நமீதா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்குமாரின் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமீதா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நடிகர் விரேந்திர சவுத்ரியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாகவும் ஒருவர் மிரட்டி உள்ளார். மிரட்டிய நபரின் புகைப்படத்தை நமீதா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் நமீதா கூறியிருப்பதாவது:- “புகைப்படத்தில் இருக்கும் நபர், இன்ஸ்டாகிராமில் என்னை ஆபாசமாக அழைத்தார். எனது வலைத்தள கணக்கை ‘ஹேக்’ செய்துவிட்டதாக கூறினார். எனது ஆபாச படத்தை பார்த்ததாகவும், அதை இணைய தளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறினார். நான், அதை செய் என்றேன். இதுபோன்ற நபர்கள்,…

சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து ரூ.150 கோடி இழப்பு !

இன்று முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி தொடர் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள். படப்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ரஜினிகாந்த் நடித்து வரும்…

குற்றவாளிகள் நாளை காலை தூக்கில் இடப்படுவார்கள்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரிய குற்றவாளிகளின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது. அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது பல முறை தள்ளி போனது. இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் சட்டப்பூர்வ கோரிக்கைகள் அனைத்தும் தள்ளுபடியாகின. இதனை அடுத்து, அவர்கள் 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட்…