கனடாவில் உயர் கல்வி வசதி பெற்றுத்தருவதாக பண மோசடி – யுவதி கைது

கனடாவில் உயர் கல்விக்கான வசதியை பெற்றுத்தருவதாக தெரிவித்து போலி ஆவணங்களைத் தயாரித்தமை, பண மோசடியை மேற்கொண்டமை மற்றும் அதற்கு ஒத்தாசை வழங்கிய சம்பவம் தொடர்பில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இவர் மொறட்டுவ அங்குலான பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ விசேட குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சம்பவ இடத்தில் இருந்து 30 கடவுச் சீட்டுக்கள், 35 போலி ஆணவங்களைக் கொண்ட 2 கணனிகளும், 2 அச்சு இயந்திரமும், கையடக்க தொலைபேசி ஒன்றும், போலி முத்திரை ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.

Related posts