ஈரானிய ரீ மேக் படத்திற்கு இளையராஜா இசை..!

உயிர் மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கியவர் சாமி. இவர் தற்போது அக்கா குருவி என்ற படத்தை இயக்கி உள்ளார். 3 உலக புகழ்பெற்றாரானிய படமாக சிவரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்திற்கு இளையராஜா இன அமைக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சாமி அவரை அணுகியபோது அவரது முந்தைய படங்கள் பற்றி அறிந்திருந்த இளையராஜா முதலில் படத்தை எடுத்துவிட்டு வாருங்கள், பார்த்துவிட்டு இசை அமைப்பது பற்றி முடிவு செய்கிறேன் என்று கூறினார் இப்போது படத்தை முடித்து விட்ட சாமி, அதனை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார். தற்போது இளையராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சாமி கூறியதாவது: நான் இயக்கிய மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது சில்ட்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் அன்பு எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதிலாக, இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையை பெற்றது

இப்படம் 80களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்ற ரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 ஆண்டுகள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.

இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன், அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக சில்ரன் ஆப் ஹெவன் படத்தை இயக்கிய இயக்குனர் மஜித் மஜிதியை அழைக்கவிருக்கிறேன்,இவ்வாறு இயக்குனர் சாமி கூறினார்.

Related posts