அலைகள் வாராந்த பழமொழிகள் 29.10.2019

01. எதுவும் சாத்தியம் என்று நம்புங்கள் படைப்பாற்றல் மிக்க சிந்தனைக்கு இதுவே அடித்தளமாகும். 02. சாத்தியமில்லை என்ற வார்த்தையை உங்கள் சிந்தனை பேச்சில் இருந்து அகற்றுங்கள். 03. ஒரு விடயத்தை செய்ய முடியும் என்று நினையுங்கள், ஏன் செய்ய முடியாது என்று சிந்திக்க வேண்டாம். 04. பாரம்பரிய சிந்தனையாளரின் மனம் செயலிழந்துள்ளது. சராசரி மக்கள் எப்போதுமே முன்னேற்றத்தை வெறுப்பர். 05. மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அதுதான் அவனுக்கு சொந்தமான இடம். 06. ஒரு பொருளை விற்பதற்கு தலை சிறந்த வழி இருக்கிறது. அதை கண்டு பிடியுங்கள். 07. ஒரு வேலையை செய்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. படைப்பாற்றல் மிக்க எத்தனை மனங்கள் உள்ளனவோ அத்தனை வழிகள் உள்ளன. 08. பனிக்கட்டி மீது எதுவும் வளர்வதில்லை. பாரம்பரியம் மனங்களை பனிக்கட்டி போல உறைய செய்துவிடும். ஆகவே புதுமைக்கு…

பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அதிக விலை கொடுத்து இதன் வெளியீட்டு உரிமைகள் வாங்கப்பட்டு உள்ளன. தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன. உலகளவில் மொத்த வசூலில் சுமார்…

சுஜித் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில் சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது. இந்நிலையில் சுஜித் மறைவிற்கு ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், திமுக எம்.பி., கனிமொழி, தெலுங்கானா ஆளுநா் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ராகுல்காந்தி: குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து…

சுஜித் மறைவு: கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக்இரங்கல்

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 4 நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதிகாலை 4.30 மணி அளவில் சிறுவன் சுஜித் உடல் இடுக்கி போன்ற கருவி மூலம் பேரிடர் மீட்புக்குழுவினர் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது. பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்டது. கவிஞர் வைரமுத்து சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில்,…

தண்ணீர் தொட்டியில் மூழ்கி துடிதுடித்து பலியாக மகள்

இந்தியாவின், திருச்சி மாவட்டத்தையே உளுக்கிய சம்பவமான சுர்ஜித் இறப்பின் துயரம் ஓய்வதற்குள்ளேயே மற்றமொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை தொலைகாட்சியில் கூர்ந்து பார்த்து வந்த பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைக்கு இப்படியொரு கதி நேரும் என கனவிலும் நினைத்து இருக்கமாட்டர். தூத்துக்குடி மாவட்டம் தெரசபுரத்தில் வசிப்பவர் மீனவர் லிங்கேஸ்வரனிற்கும் மனைவி நிஷாவிற்கும் ரேவதி சஞ்சனா என்ற இரண்டு வயது பெண் குழந்தையொன்று இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி மாலை 5.40 மணியளவில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுத்த சுர்ஜிதை மீட்க்கும் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில், பார்த்து வந்துள்ளபோது இரண்டு வயது ரேவதி தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, கேட்பாரற்று துடிதுடித்து இறந்துள்ளார். சில நேரம் கழித்து குழந்தை காணவில்லை என அனைவரும் தேடவே, குழந்தையின் தந்தை குளியலறையில் சென்று பார்க்க, குழந்தையின் ஒரு…

ஜனாதிபதி தேர்தல்: 5 தமிழ் கட்சிகளின் இறுதி முடிவு நாளை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவை நாளை 30ஆம் திகதி எடுக்கவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்கும் 5தமிழ் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிறைட் இன் விருந்தினர் விடுதியில் நேற்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது. சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான த.சித்தார்தன், ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் கென்ரி…