ஹன்சிகாவுக்கு ரூ.12 கோடி கார் பரிசு

ஹன்சிகாவுக்கு அவரது தாய் மோனா மோத்வானி சொகுசு காரை தீபாவளி பரிசாக அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது மஹா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் வருகிறார். மஹா படத்தில் வரும் ஹன்சிகாவின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. படத்துக்கு எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது. மேலும் 3 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். வெப் தொடருக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 50 படங்களில் அவர் நடித்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சமூக சேவை பணிகளுக்கு ஒதுக்குகிறார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகளை படிக்கவைக்கிறார்.…

ரஜினிகாந்த் முதல் காதல் அனுபவம்நடிகர் தேவன்

மலையாள நடிகர் தேவன், ரஜினிகாந்தின் முதல் காதல் பற்றி சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு காதலித்த அனுபவம் உள்ளது. இதனை சில படவிழாக்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது பாட்ஷா படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் தேவன், ரஜினிகாந்தின் முதல் காதல் பற்றி சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- “மும்பையில் பாட்ஷா படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஒருநாள் ரஜினிகாந்த் என்னையும், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோரையும் விருந்துக்கு அழைத்து இருந்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நினைவுகளை பகிர்ந்தார். ரஜினிகாந்த் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தவறான பக்கமாக பஸ்சில் ஏறியதை பார்த்து கோபமாக கண்டித்துள்ளார். பதிலுக்கு மாணவியும் ரஜினியை…

மஹிந்தவே எமது பிரதமர் கலாநிதி சரத் அமுனுகம

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் பிரதமராக மஹிந்த ராஜபக்க்ஷவே வருவார் என கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது கூட்டணியை பொறுத்த வரையில் நாம் அனைவரும் மஹிந்த ராஜபக்க்ஷவையே பிரதமர் பதவிக்கே நிலை நிறுத்துவோம் என ஏகமனதாக தீமானித்துள்ளோம் ஜனாதிபதியாக பிரதம மந்திரியாக நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பிரதமராக உருவாக்குவோம். அதே வேளை ஐக்கிய தேசிய கட்சியை எடுத்து கொண்டால் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஐ.தேகாவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யார் தமது பிரதமர் எனபதை பெயரிடாது தவிர்த்து வருகிறது. ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும் பட்சத்தில் யார் ஐ.தே.காவின் பிரதம மந்திரி என பொது…

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படும்

என் மீது உண்மையான நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள். என்னைப்பற்றி பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்றுமுன்தினம் (29) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணாஅம்மான்) , பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், நுவான் ரத்வத்த, வடகிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அவர் தொடர்ந்தும் பேசுகையில், நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம். பாதுகாப்பான நாட்டை ஏற்படுத்தி தருவோம். இன்று புத்திஜீவிகள், வர்த்தகர்கள்,துறைசார்ந்த வல்லுந‌ர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்காலத் திட்டமிடலுடன் தயாரித்துள்ளார்கள்.…

தமிழன் ஒருவன் ஜனாதிபதி ஆவது கனவிலும் கூட நடக்காத ஒன்று

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க தயாரில்லை என்பதை காட்டுவதற்காக தமிழ் தேசிய சிந்தனையுடன் எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடு மட்டுமே என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்று தபால்மூல வாக்களிப்பு தொடங்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நான் தமிழ் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று மட்டுமே. ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதி ஆவது கனவிலும் கூட நடக்காத ஒன்று. ஆனாலும் கூட நான் எதற்காக தேர்தலில் நிற்கிறேன்? என பலர் கேட்டுள்ளனர், கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளர்…

சுஜித் மரணம்: மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்

குழந்தை சுஜித் மீட்பு விவகாரத்தில், யார் மீதும் சினம் கொள்ளாமல், குளறுபடிகளுக்கு மனசாட்சியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) வெளியிட்ட அறிக்கையில், "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது என பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால், முதல்வர் பழனிசாமி கோபப்படுகிறார். "ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா?" என்று அர்த்தமற்ற கேள்வியைக் கேட்கிறார்; தனது தோல்வியை மறைக்க தவியாய்த் தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை; சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தைக் கேட்டேன். ஏதோ ஒரு கற்பனை உலகில் மிதக்கும் முதல்வரிடமிருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான். நான் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும்…