உலக அளவில் செயலிழந்த சமூக வலைதளம் ட்விட்டர்

உலக அளவில் தொழிநுட்ப கோளாறால் செயலிழந்து உள்ளது சமூக வலைதளம் ட்விட்டர்.

காலையில் இருந்து ட்விட்டர் இணைய தளம் தொழிநுட்ப கோளாறால் செயல் இழந்து உள்ளது. ட்வீட் பயனர்களின் உள்நுழையும் முயற்சிகளை ட்விட்டரின் வலைதளத்திற்கு பயனர்களை திருப்பி விடுகிறது.

சமூக ஊடக வலைதளமான ட்விட்டர் தொழிநுட்ப செயலிழப்புடன் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான உலகளாவிய பயனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான், கனடா மற்றும் இந்தியா உட்பட உலகளவில் இருந்தும் 4,000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து உள்ளன.

இது குறித்து ட்விட்டர் கூறி உள்ளதாவது;-

“ட்வீட் செய்வதிலும், அறிவிப்புகளைப் பெறுவதிலும் அல்லது டிஎம்களைப் பார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் தற்போது ஒரு தீர்வை கண்டறிந்து உள்ளோம். விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்” என்று ஒரு ட்வீட்டில் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு விவரங்கள் எதுவும் தரப்படவில்லை.

Related posts