அலைகள் வாராந்த பழமொழிகள் 22.08.2019

01. எப்போதுமே அவையில் துணிச்சலாக பேசுங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க அது மிக அவசியம்.

02. பேசும்போது புன்னகை அவசியம் தன்னம்பிக்கையை தருவதுதான் புன்னகை. சிரிக்கும் ஒருவர் மீது மற்றவர் கோபம் கொள்ள முடியாதல்லவா..?

03. அரை குறையாக புன்னகைப்பது நீங்கள் விரும்பும் வெற்றியை உங்களுக்கு பெற்றுத்தரமாட்டாது.

04. அதற்காக சும்மா புன்னகைத்தபடி அலைவதல்ல.. புன்னகையின் சக்தியை பயன்படுத்துங்கள் என்பதே அதன் பொருளாகும்.

05. ஒரு சூழ்நிலை குறித்து எதையும் செய்யாமல் இருப்பதால் உங்களுக்கு பயமே அதிகரிக்கிறது. அது தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறது, உடன் களமிறங்க வேண்டும்.

06. பலர் உங்களை பார்த்து குரைக்கலாம் ஆனால் கடிக்கிற நபர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

07. உங்கள் மனச்சாட்சி எதை சொல்கிறதோ அதை செய்யுங்கள். சரியான காரியத்தை செய்வது வெற்றிக்கான ஒரு நடைமுறையாகும்.

08. முன் வரிசையில் அமருங்கள், கண்ணோடு கண் நோக்குங்கள். 25 வீதம் வேகமாக நடந்து செல்லுங்கள். துணிச்சலாக பேசுங்கள், பெரிதாக புன்னகையுங்கள்.

09. இன்றைய இளையோரில் பெரும்பாலோர் பொருளாதார பாதுகாப்பே வெற்றி என்று கருதுகிறார்கள். இவர்களிடம் எப்படி ஒரு நிறுவனத்தை ஒப்படைப்பது..?

10. அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் மிக சிறிய அளவிலேயே சிந்திக்கிறார்கள். ஒரு பிரமாண்டமான தொழிலுக்கு நீங்கள் நினைப்பதைவிட குறைவானவர்களே வருவார்கள்.

11. வெற்றியை பொறுத்தளவில் அது ஒருவருடைய கல்வி தகுதியாலோ அல்லது குடும்ப பின்னணியாலோ மதிக்கப்படுவதில்லை. மாறாக அவர்களுடைய சிந்தனையின் அளவினால்தான் மதிக்கப்படுகிறது.

12. நாம் எவ்வளவு பிரமாண்டமாக சிந்திக்கிறோம் என்பதுதான் நமது சாதனைகளின் அளவை தீர்மானிக்கிறது.

13. மனிதர்களின் மிகப்பெரிய பலவீனம் எது தெரியுமா தன்னை தானே சிறுமைப்படுத்திக் கொள்வதும், கூடவே தனது ஆற்றலை குறைவாக மதிப்பதும்தான் ஒரு மனிதனின் பெரும் பலவீனம்.

14. உன்னை நீயே அறிந்து கொள்..! என்பது சாக்கிரட்டீஸ் சொன்னது. ஆனால் பெரும்பாலானவர்கள் தம்மிடமுள்ள எதிர்மறையான எண்ணங்களை அறிந்து கொள்வதே இதன் கருத்து என்று கருதி எதிர்மறையாக சிந்தித்து என்னால் இயலாதென எண்ணி தோல்வியடைகிறார்கள்.

15. நம்முடைய குறைபாடுகளை நாம் அறிவது முக்கியம்தான் ஆனால் அவைகளை மட்டுமே அறிந்து வைத்திருப்பதால் நாம் முன்னேற முடியாது.

16. நீங்கள் எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தவராக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு பிரமாண்டமாக சிந்தியுங்கள்.

17. நீங்கள் பாவிக்கின்ற சொற்கள் பெரிதாக இருக்க வேண்டியதில்லை உங்கள் உள்ளத்தை புரிந்த சொற்களே அவசியம், அவைகளே மற்றவருடன் தொடர்பை ஏற்படுத்தும்.

18. நாம் வார்ததைகளிலும் சொற்களிலும் சிந்திப்பதில்லை காட்சி வடிவில்தான் சிந்திக்கிறோம். ஒவ்வொரு வார்த்தையும் பேசும்போது மனதில் காட்சிகளையே உருவாக்குகின்றன.

19. நீங்கள் பேசும்போதும், எழுதும்போதும் மற்றவர் மனங்களில் ஒரு திரைப்படத்தை ஓட்டும் புரொஜக்டர் போல தொழிற்படுகிறீர்கள்.

20. நீங்கள் உங்கள் குழுவினரை பார்த்து தோற்றுவிட்டோம் என்றால் தோல்வியான காட்சிகளே மனதில் தெரியும்.

21. எப்போதும் பிரச்சனை என்னவென்றால் என்று பேச தொடங்க வேண்டாம். சவால் என்னவென்றால் என்று பேசுங்கள் மற்றவர் மனங்களிலும் உற்சாகம் பிறக்கும்.

22. நாம் பெரிய செலவீட்டை செய்திருக்கிறோம் என்று கூறினால் ந~;டமான காட்சியே தோன்றும். முதலீடு என்று சொன்னால் வெற்றி காட்சியே தோன்றும்.

23. நாம் கூறுவது நேர்மறையாகவும் மற்றவர் மனங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துதாகவும் இருக்க வேண்டும்.

24. நாம் தோற்கவில்லை தொடர்ந்து முயற்சிக்கலாம் என்று சிந்தியுங்கள்.

25. என்னிடமுள்ள பொருளை விற்க முடியவில்லை ஆனால் அதை விற்க ஒரு சிறப்பு வழியை கண்டு பிடிப்பேன் என்று எண்ணுங்கள்.

அலைகள் பழமொழிகள் 22.08.2019

தொடர்ந்தும் வரும்..

Related posts