எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதலில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனவும், தற்போது அனைவரும் தாக்குதல் தொடர்பில் மற்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் ஊடாக காயமடைந்தவர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களுக்கு நீதி தேவையே அன்றி நட்டஈடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ஏற்பாடு செய்த, அதற்கு உதவிய அல்லது புலனாய்வு தகவல்களை வேண்டுமென கண்டுகொள்ளாத எந்தவொரு விடயத்திலாவது இதனுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் மட்டும் அல்லாது எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்பத்தில் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பலமாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தவொரு அறிக்கையும் மக்களிடம் வழங்கப்படவில்லை எனவும், எங்களுக்கு தேவை உண்மை அன்றி தேர்தல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான அறிக்கை கூட இதுவரையில் மக்களிடம் வழங்கப்படவில்லை எனவும் அதனால் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தன்னிடம் வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை எனவும் தான் மக்களின் கட்சி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts