24-ம் புலிகேசி படம் கைவிடப்பட்டது நஷ்ட ஈடு வடிவேல் சம்மதம்?

வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார்.…

விஜய் – அஜித் ரசிகர்கள் மோதல் கத்தி வெட்டு ?

சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’, விஜய்யின் ‘பிகில்’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. விஜய் ரசிகர்கள் அஜித் படத்துக்கு எதிராகவும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் மோதிக்கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த மோதல் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறும்போது, “சீரற்ற பருவநிலையால் பல இடங்களில் இயற்கை பேரிடர் நடக்கிறது. வறட்சி நிலவுகிறது. குற்ற…

துவேஷங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகன்

நடிகர்: சமுத்திரகனி, ராஜாஜி நடிகை: சங்கவி டைரக்ஷன்: தனராம் சரவணன் இசை : நடராஜன் சங்கரன் ஒளிப்பதிவு : விஜயன் முனுசாமி கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் சமுத்திரக்கனி பெரியார் கொள்கையில் ஈடுபாடு உள்ளவர். "கொளஞ்சி" படத்தின் விமர்சனம். சாதி, மத துவேஷங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவரது மனைவி சங்கவி. இரண்டு மகன்கள். இதில் ஆறாவது வகுப்பு படிக்கும் மூத்த மகன் கொளஞ்சியின் சுட்டித்தனங்கள் ஆசிரியர்களையும் ஊர்க்காரர்களையும் எரிச்சல் படுத்துகிறது. சமுத்திரக்கனியிடம் புகார் செய்கிறார்கள். மகனை அடித்து உதைத்து கண்டிக்கிறார். இதனால் அவர் மீது கொளஞ்சிக்கு வெறுப்பு வருகிறது. ஒரு சூழ்நிலையில் சமுத்திரகனிக்கும் சங்கவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிகின்றனர். இதை சாதகமாக்கி கொண்டு கொளஞ்சி தாயுடன் சென்று விடுகிறான். தந்தை பாசத்தை கொளஞ்சி புரிந்து கொண்டானா? சமுத்திரக்கனியும் சங்கவியும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை. முற்போக்கு…

விக்னேஸ்வரன் தலைமையில் வல்லரசுகளின் புதிய கூட்டணி

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதால், தமது எண்ணப்படி செயற்படும் வகையில் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியை வல்லரசுகள் உருவாக்குகின்றன. இந் நிலையில், நாம் வல்லரசுகள் சார்பாக செயற்பட மாட்டோம் என்பதாலேயே எம்மை அக் கூட்டில் இணைய விடாது தடுக்கின்றன எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்.கொக்குவிலில் இடம்பெற்றது. இதன்போது அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்தியா போன்ற சர்வதேச அல்லது வல்லரசுகளின் நலன்களுக்காக அவர்களது எடுபிடிகளாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்தனர். ஆனால், கூட்டமைப்பின் இச் செயற்பாடுகளை மக்கள் உணர்ந்துள்ளதால், கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் பாரிய தோல்வியை எதிர்நோக்கப் போகின்றனர் என்ற அடிப்படையில்…

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதலில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனவும், தற்போது அனைவரும் தாக்குதல் தொடர்பில் மற்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலின் ஊடாக காயமடைந்தவர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களுக்கு நீதி தேவையே அன்றி நட்டஈடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ஏற்பாடு செய்த, அதற்கு உதவிய அல்லது புலனாய்வு தகவல்களை வேண்டுமென கண்டுகொள்ளாத எந்தவொரு விடயத்திலாவது இதனுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் மட்டும் அல்லாது எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்…

வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு குறைந்த நிதி ஒதுக்கிய இந்தியா?

இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என்றும் இந்தியா டுடே செய்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இலங்கை விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது. எனினும், மொரீஷியஸ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கே இந்த ஆண்டில் இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மொரீஷியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடியில் இருந்து, 1100 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் முகமது இப்ராஹிம் சோலி அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 125 கோடி ஒதுக்கப்பட்ட…