இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி..!

உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

தோல்விக்கான காரணங்களை ஓவ்வொருவரும் ஓவ்வொரு விதமாக கூறி வருகின்றனர்.

உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளார்.

பிரித்தானியாவில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Related posts