அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியதுடன், சற்றுமுன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டு மக்கள் தொடர்பான பொறுப்புகளை வகிக்கும் தகுதி இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாத அரசாங்கத்தினால் மக்கள் குறித்த பொறுப்புக்களை வகிக்க முடியாது எனவும் இவ்வாறான ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கும் அனுப்பி வைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சரியான முறையில் செயற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வென்றெடுக்க முடியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts