அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது. இப்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். அத்துடன் படத்தின் கதையையும் தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டு உளவுப்பிரிவொன்று இலங்கைக்குள் பாரிய சதித்திட்டம்

நாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாநாட்டின் பின்னர் வெளிநாட்டு உளவுப்பிரிவொன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டமொன்று தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பினால் இன்று கிருலப்பனையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு உளவுப்பிரிவின் சதித்திட்டம் குறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னர் பொதுபலசேனா அமைப்பு கூறியிருந்த போதிலும், பாதுகாப்புக் காரணிகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு நிறைவடைந்ததும் அதனை வெளிப்படுத்துவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார். பொதுபலசேனா அமைப்பு நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு பண்டாரகம, அடுளுகம என்ற பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முஸ்லிம்…

புலிகள் போதைப் பொருள்: ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது

ஜனாதிபதிக்கு உள்ள பிரச்சினைகளில், தென்னிலங்கையில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கு விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்பதுடன், இவ்வாறான கருத்துக்களை ஜனாதிபதி தவிர்க்க வேண்டுமென வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப் பொருள் விற்றார் என ஜனாதிபதியின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இன்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பழகிக்கொண்டுள்ளார். அதன் பிரகாரம், பிரபாகரன் போதைப் பொருள் விற்பனை செய்தவர் என்ற என்ற கருத்தைக் கூறி குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளார். இவர் பன்னாட்டு வர்த்தகத்தில், போதைப் பொருள் வர்த்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் ஈடுபட்டதாக சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதிக்கு ஏற்கனவே…

சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய பலாலி விமான நிலையம்

யாழ். பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இத்தொகை சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகை அரை பங்காகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக கையாளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமானங்களை நடத்திவரும் அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பலாலி விமான நிலையம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அபிவிருத்திக்காக 1050 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இத்தொகையில் 900 மில்லியன் ரூபா இலங்கை சிவில் விமான அதிகாரசபை நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. இந்த புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பெருந்தொகை வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய விமான நிலையமாக மட்டுமன்றி சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய நிலையமாக அதாவது தென்னிந்தியாவை உள்ள நகரங்களை…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கைது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலுமே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் இன்று (02) குற்றப்…