டென்மார்க்கில் 57.500 பிள்ளைகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.

டென்மார்க்கின் புதிய பிரதமராக வந்திருக்கும் மெற்ற பிரடிக்சன் அம்மையார் தான் குழந்தைகளின் பிரதமர் என்று திருவாய் மலர்ந்தருளியது தெரிந்ததே.

இப்போது டென்மார்க்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே 57.500 பிள்ளைகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

யூலன்ட்போஸ்டனில் இது வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் கூட்டு கட்சிகளான எஸ்.எப், றடிகல, என்கில்ஸ் லிஸ்ற் என்பன இதற்காக 250 – 300 மில்லியன் குறோணர்கள் சிறப்பு நிதியாக ஒதுக்க இணங்கியுள்ளன. இப்பணம் 0 முதல் 14 வயது பிள்ளைகளுக்குரியதாகும்.

எப்படி இந்தப் பணத்தை வழங்குவது என்பது தெரியவில்லை ஆனால் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பிள்ளைகள் காசோலை என்ற முறை மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டென்மார்க் புள்ளி விபரங்கள் 64.500 பிள்ளைகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாகக் கூறுகிறது.

றெட்பாண் அமைப்பின் தலைவி யொகேனா ஸ்மித் நீல்சன் கூறும்போது இந்த பணம் காய்ந்த இடத்தில் முதலில் விழுந்து வறுமையை போக்கட்டும் என்கிறார்.

பிள்ளைகள் ஏழ்மையில் வாழ்ந்தால் அது சமுதாயத்திற்கு பேரவலமாக மாறும் என்று சமூகவியலாளர் கூறுகிறார்கள்.

எப்படியோ முன்னைய ஆட்சி இதை செய்யவில்லை என்பது துயர் தரும் ஒரு தகவலே.. இப்போதாவது செய்கிறார்களே என்பது ஆறுதல் தரும் விடயமாகும்.

அலைகள் 29.06.2019

Related posts