டென்மார்க் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி

டென்மார்க் கலைஞர் சங்கம் இந்த ஆண்டு நடத்தவுள்ள முப்பெரும் விழாக்களில் முதலாவது திரையிசை நடனப்போட்டி எதிர்வரும் 09 ஆனி மாதம் நடைபெற இருக்கிறது.

கேர்னிங் நகரில் உள்ள இல: 7 கலாச்சார இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

இது நடனக் கலைஞர்களுக்கும் திரையிசை நடன ஆர்வலருக்கும் அரியதோர் வாய்ப்பாகும். அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தத்தமது ஆற்றலை காட்ட வேண்டியது முக்கியமாகும்.

ஆடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்..
அழகான வர்ண விளக்குகளில் ஜாலங்களில்..
அற்புதமான துல்லியமான இசையோடு..
அளவோடு மக்களை கூட்டி தெளிவாக கண்களுக்கு தெரியும்படியாக செய்து..
கலையில் தேர்ந்த பலர் ஒன்று கூடி முன்னெடுக்கும் பெரு நிகழ்வு..
இது விளையாட்டல்ல..
சுவை பொருந்திய நிகழ்வு என்பதை மறந்துவிடாதீர்கள்..

அலைகள் 30.03.2019

Related posts