நயன்தாராவின் ஐரா திரைப்பட வெளியீட்டில் தாயகத்தில் ரியூப் தமிழ்

நயன்தாரா இரட்டை வேடங்கள் ஏற்று நடித்துள்ள ஐரா என்ற திரைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான இலங்கை உரிமையை வாங்கியுள்ளார் பிரபல திரைப்பட வெளியீட்டாளரான வல்வை எஸ். ஜெயபாலசிங்கம். இப்படம் யாழ்ப்பாணத்தில் ரியூப் தமிழ் அனுசரணையுடன் மகத்தான வெளியீடு காண இருக்கிறது. தமிழ் திரைப்பட விநியோகத்தில் புதிய காலடி வைக்கிறார் எஸ். ஜெயபாலசிங்கம் அவருடன் இணைந்து ரியூப்தமிழும் திரைப்பட வெளியீட்டில் இரு கால்களையும் பதிக்கிறது. இதுவரை மூன்று திரைப்படங்களை வெளியிட்ட ரயூப் தமிழ் நிறுவனம் இப்போது முற்றிலும் தமிழக நடிகர்களின் படங்களை இலங்கையில் திரையிடும் முயற்சியில் வெளியீட்டாளர் எஸ்.ஜெயபாலசிங்கத்துடன் கைகோர்க்கிறது. தற்போது கனடாவில் வாழும் எஸ். ஜெயபாலசிங்கம் அவர்கள் மேலும் பல திரைப்படங்களை வேண்டியுள்ளார். கொழும்பில் முக்கிய பணிகளை பிரணவன் யோகசபாபதிப்பிள்ளை முன்னெடுத்துள்ளார். யாழ். குடாநாட்டுக்கான வெளியீட்டு பணிகளில் ரியூப் தமிழ்…

படமாகும் அன்னை தெரசா வாழ்க்கை

அன்னை தெரசா வாழ்க்கை படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகளின் வாழ்க்கை கதைகளை படமாக்குவதில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படங்களாகி வெளிவந்துள்ளன. தற்போது பிரதமர் நரேந்திரமோடி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இந்த வரிசையில் அன்னை தெரசா வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. தற்போது இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும்

திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் எனவே அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என சுசிந்தரன் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு... உங்களுக்காக காத்திருக்கும்,பலகோடி மக்களின் நானும் ஒருவன் என சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த டுவீட் நேற்றிரவே ட்ரெண்டாக தொடங்கியது. இது தொடர்பாக அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். ஏற்கனவே அஜித் தெரிவித்திருந்ததையே அவரது ரசிகர்களும் தற்போது உறுதிபட தெரிவித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். "அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்த…

‘ஆதரவு யாருக்கு?’ – மு.க.அழகிரி பதில்

ஆதரவு யாருக்கு என்பது குறித்து மு.க.அழகிரி பதிலளித்துள்ளார். மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன், அறிவிக்கப்பட்டார். ‘ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன். ஆதரவு கேட்பேன்’ என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார். இந்தநிலையில், மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை. இவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

ஓரம்கட்டப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இந்த முறை சீட்டு இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தகவல். தமிழக காங்கிரஸில் அதிரடிக்கு பெயர் போனவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரொடு தந்த பெரியாரின் பேரன், திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சம்பத்தின் மகன் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். அதிரடி கருத்துக்களால் எதிரணியினரை கலங்கடித்தவர். ஈரோடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என பலமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஈரோடு தொகுதியை மதிமுக வலியுறுத்தி கேட்டு வந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை நீங்கள் மாநிலங்களவையில் நின்று எம்பியாக வேண்டும் என திமுக தலைமை விருப்பம் தெரிவிக்க அப்படியானால் ஈரோடு தொகுதியை தாருங்கள் என வைகோ கோரிக்கை வைக்க தட்டாமல் ஏற்றது திமுக. மிக முக்கியமான கூட்டணிக்கட்சி, ஒரு இடம் மட்டும்தான் அதுவும் விரும்பிய இடம் என்பதால் உடனடியாக…

திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் மற்றும் தூத்துக்குடியில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முழு பட்டியல் இதோ: 1) 2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச். 2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏ., எம்பில். பி.எச்டி., 3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ., 4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி., 5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி., 6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி., 7)…

ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நாளை அல்லது நாளைமறுதினம் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டுமென புலம்பெயர் பிரதிநிதிகளும் இலங்கையிலிருந்து சென்றுள்ள தமிழ் பிரதிநிதிகளும் கோரிக்கைவிடுக்கவுள்ளனர்.

அரச தரப்பு தூதுக்குழு நாளை ஜெனிவா வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினர் நாளை திங்கட்கிழமை ஜெனிவா வருகின்றனர். இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் நாளை ஜெனிவா வருகின்றனர். தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் நாளை ஜெனிவா வருகின்றனர். 20 ஆம்திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் அரசாங்கத் தூதுக்குழுவினர் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார். அத்துடன் குறித்த தூதுக்குழுவினர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளனர்.

அழுத்தம் பிரயோகிக்க தயாராகும் சர்வதேச நாடுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தயாராகி வருகின்றனர். இந் நிலையில் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அதுதொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன், பிரிட்டன், ஜேர்மன், கனடா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் பின்னரே சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளன

யுத்தம் காலத்தில் இராணுவ வீரர்கள் சட்டவிரோத குற்றங்களிலோ , மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படவும் இல்லை. ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரே ஒருசில சட்டவிரோ குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டா. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் மீதான உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு நீதிமன்றத்தினூடாசக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வெவ்வேறு கொள்கைகளையுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கலாம். ஆனால் அனைத்து உறப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு செயற்பட கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.