ஏமன் உள்நாட்டுப் போரில் ஒரே ஆண்டில் 4,800 பேர் பலி

ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போரில் கடந்த வருடம் மட்டும் பொதுமக்கள் 4,800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா. சபை தரப்பில், “ உலக அகதிகள் அமைப்பின் சார்பில் வியாழக்கிமை தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றன அல்லது காயமடைந்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் மீண்டும் ஒப்பு கொண்டனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.

Related posts