அழியாத கோலங்களும் ஓர் அரிய செய்திதான்..

செய்தி என்றால் என்ன..? எங்கோ ஓர் அரசியல்வாதியின் அறிக்கையா செய்தி இல்லை.. நாம் காணும் இடங்களில் எல்லாம் அரிய செய்திகள் உள்ளன.

இன்று புத்தர் உயிருடன் இருந்திருந்தால்..

டென்மார்க்கில் ராற்றோ என்னும் பச்சை குத்தாத இளம் தமிழ் பிள்ளை ஒன்றை பிடித்து வந்தால் உன் பிள்ளையை உயிர்ப்பித்து தருவேன் என்று கூறியிருப்பார்.

அப்படி ராற்றோ என்னும் பச்சை குத்துவது தமிழரிடையே பெருகிவிட்டது..

இங்கே ஒரு டென்மார்க் வாழ் நண்பர் தனது கண்ணில் இனி வாழ்வில் என்றுமே அழிக்க முடியாத பச்சையை குத்திக் கொண்டு நடந்து வந்தார்.

அவரை உடனடியாக சந்தித்து ஒரு பேட்டியை பதிவு செய்தோம். அவர் கூறியதில் இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.

அழிக்கவே முடியாத இந்தப் பச்சையை ஏன் குத்தினீர்கள் என்ற கேள்விக்கு காரணம் சொல்ல தெரியவில்லை என்கிறார்.

இரண்டாவது கேள்விக்கு குடும்பத்தில் ஆதரவு இருக்கிறது இல்லை என்ற இரு கருத்துக்கள் நிலவுவதாக தெரிவிக்கிறார்.

தனது சிறு பிள்ளைக்கு பச்சை குத்த முந்திய தந்தைக்கும் இப்போதைய தந்தைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்கிறார்..

முகத்தில் வரைந்த இந்த ஓவியத்தை அன்றாடம் பார்த்து சலித்துவிட்டது என்று மேலும் பத்து வருடங்கள் போன பின்பு கருதினால் என்ன செய்வது..?

நாளைக்கு உங்கள் பிள்ளைகளும் இப்படி பச்சை குத்திவிட்டு வரலாம், ஆகவே இது குறித்த பெற்றோர் பிள்ளைகள் உரையாடல் முக்கியம் போல தெரிகிறது.

உடம்பு முழுவதும் ராற்றோ பச்சை குத்திய ஒரு டேனிஸ் பெண்மணியிடம் அவருக்கு பிறந்த பிள்ளையை நகர சபை பறித்த சம்பவம் ஒன்றும் சில காலத்தின் முன் நடந்தது ஏனென்றால் தாய்ப்பால் நஞ்சாகலாம் என்கிறார்கள்.

ஆகவேதான் இது முக்கியமாகிறது..

அன்று பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரைப்படம் மனதில் ஓர் அழியாத கோலத்தைப் போட்டது. ஆனால் இன்று வரையும் உடல் கோலங்களும் அழியாத கோலங்களே.

அலைகள் 06.03.2019

Related posts