டென்ராம் கழகம் நடத்தும் மாபெரும் ஐரோப்பா தழுவிய உதை பந்தாட்டப் போட்டி

டென்ராம் கழகம் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகிறது. நடைபெற இருக்கும் இடம் ஸ்னைபியா உள்ளக அரங்கில் Snejbjerg hallen, Hovedgade 75, 7400 Herning நடைபெற இருக்கிறது. இம்முறை நடைபெறும் போட்டி சாதாரண போட்டியல்ல நோர்வே, ஜேர்மனி, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இதனால் போட்டிகள் பொறிகக்க இருக்கின்றன. மேலும் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற இருப்பது இன்னொரு சிறப்பாகும். சீனியர் பிரிவில் 32 கழகங்கள் யூனியரில் 8 கழகங்களும் மோதுகின்றன. காணத்தவறாதீர்கள்.. அலைகள் 06.03.2019

கவர்ச்சி காட்டிய 40 வயது பூமிகாவுக்கு எதிர்ப்பு

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யு டர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூமிகா. கிளாமர் நடிப்பைவிட சுட்டித்தனமான, குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களை கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட பூமிகா, தற்போது 40 வயதை கடந்த நிலையில் கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார். அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென்று ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினார். அதில் தொடை தெரியும் அளவுக்கு படுகிளாமர் உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை நெட்டில் வெளியிட்டார் பூமிகா. 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு தரப்பு அவரை பாராட்டினாலும், கிளாமர் காட்டி சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட காத்திருப்பதாக சிக்னல் தருகிறீர்களா, உங்களின் எளிமையான நடிப்பும், அழகான புன்னகையும்தான் இத்தனை நாள் ரசிகர்களை…

அதிமுக – பாஜ கூட்டணி பிரசாரம் துவங்கியது

சென்னை அருகே நேற்று நடந்த அதிமுக, பாஜ கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் அதிமுக, பாஜ கூட்டணிக் கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டமும், அரசின் புதிய திட்டங்கள் தொடக்க விழாவும் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். முதலில் அரசின் புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. அதன்பின்னர், நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: நாம் இப்ேபாது இருக்கின்ற காஞ்சிபுரம் மண்ணுக்கு எனது வணக்கம்.…

வடகொரிய தலைமையின் தகுதிக்குறைவால் பட்டினி..

வடகொரியாவில் சென்ற ஆண்டு உணவு உற்பத்தி மிகவும் மோசமாகியிருப்பதாக ஐ.நாவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. சென்ற ஆண்டு விவசாய உற்பத்தி 4.95 மில்லியன் தொன்களாகும், இது அதற்கு முந்தய ஆண்டுடன் ஒப்பிட்டால் ஐந்து லட்சம் தொன்கள் குறைவாகும். சென்ற ஆண்டு மட்டும் ஆறு இலட்சம் மக்கள் புதிதாக பட்டினி கிடப்போர் தொகைக்குள் வந்துள்ளார்கள். நாட்டின் மொத்த சனத்தொகையில் 43 வீதமானவர்கள் பட்டினி வாழ்வு வாழ்கிறார்கள், இவர்களுடைய உயிர்கள் அவமாக பிரிந்து போகாமல் தக்கவைக்கும் உணவு உதவி மட்டும் வழங்கப்படுகிறது. வடகொரியா மீது அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மோசமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது தெரிந்ததே. இதன் காரணமாக அந்த நாட்டை நிர்வகிக்க முடியாது இளம் தலைவரான கிம் யோங் உன் தடுமாறுகிறார். இவ்வளவு தடைகள் இருக்க புத்திசாலியாக இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்..? நாட்டின் விவசாயத்தை பெருக்கி…

பெங்களூருவில் போட்டியிடும் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவின் நடவடிக்கைகளை சாடி வருவதால் கர்நாடகாவில் பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில் தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். எனினும் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. பெங்களூருவில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவு பிரகாஷ் ராஜூக்கு…

மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்குவது என முடிவானது. மனநிறைவோடு இதை ஏற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார். திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இருப்பது மதிமுகவும், மமகவும் மட்டுமே. மமகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஆனால் திமுக கூட்டணியிலேயே பிரதான கட்சி என கருதப்படும் மதிமுக ஏற்கெனவே தங்களுக்கு ஐந்து தொகுதிகள் வேண்டும் என்று கூறி வந்தது. மதிமுகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி ஒதுக்கிய நிலையில் மதிமுகவுக்கும் 2…

விஜயகாந்த் 7 தொகுதிகளை கேட்டு பிடிவாதம்

அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளைக்கேட்டு விஜயகாந்த் பிடிவாதமாக இருப்பதால் அதிமுக தலைமை பரிதவித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் திமுக, அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் முதற்கட்ட ரேஸில் அதிமுக முந்தியது. பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து விட்டதைப் பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தலைமை முயன்றது. ஆனால் தேமுதிக ஒத்துவராததால் தன்னிடம் உள்ள கட்சிகளுடன் கூட்டணியை இறுதிப்படுத்தி முடிவுக்கு கொண்டுவந்தது திமுக. அதே நேரம் அதிமுக அமைச்சர் தங்கமணி தலைமையில் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விஜயகாந்த் சற்றே இறங்கி வந்ததால் அதிமுக தலைமை உற்சாகமடைந்தது. ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மாட்டேன், 21 தொகுதிகளில் தாங்கள் போட்டியிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் 8 இடம்…

கொலை சதி தொடர்பில் சாட்சியங்கள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம் (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார். இதன்போது, குறித்த கொலை சதி தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது. ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதான இந்தியர் மெர்சிலி தோமஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம்…