சராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன் 

உலக நாடுகளின் மொத்த கடன் அளவு இதுவரை இல்லாத வர லாற்று உச்சத்தை அடைந்துள்ள தாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது. மொத்த கடன் 184 லட்சம் கோடி டாலர். இவற்றில் பாதி கடனுக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பங்கு வகிக்கின்றன.

உலக நாடுகளின் கடன் அளவை அவ்வப்போது ஐஎம்ஃஎப் கணக்கிட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 182 லட்சம் கோடி டாலராக இருந்த உலகக் கடன் தற்போது 184 லட்சம் கோடி டாலராக உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த கடன் அளவானது, 2017ல் உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியின் மதிப்பில் 225 % ஆகும். சராசரியாக ஒரு தனிமனிதனின் கடன் 86 ஆயிரம் டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பில் 60 லட்சத்துக் கும் மேல். இது தனிமனித சராசரி வருமானத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம் ஆகும்.

அதிகமாகக் கடன் வாங்கியிருப்பவை அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான். இந்த மூன்று நாடுகள் தங்களுடைய பங்குக்கும் அதிகமாக கடன் வாங்கியதால் மொத்த கடனில் பாதிக்கும் மேல் வாங்கியிருக்கின்றன. பணக்கார நாடுகளில் முன்னணியில் உள்ள நாடுகளாகிய இவைதான் கடன் வாங்குவதிலும் முன்னணியில் உள்ளன என்று சர்வதேச செலாவணி நிதியம் குறிப்பிட்டுள்ளது.

2008ல் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு கடன் வாங்குவது அதிகரித்துள்ளது என்று ஐஎம்எஃப் கூறியுள்ளது. இதில் சீனாவின் கடன் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பதாகவும், 3 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Related posts