மீ டூ புகாருக்கு பிறகு பட வாய்ப்பு இல்லை : ஸ்ருதி ஹரிஹரன்

மீ டூ இயக்கம் திரையுலகிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது அர்ஜுன் வழக்கு தொடுத்தார். ஸ்ருதியும் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் மீ டூ புகாருக்கு பிறகு தனக்கு பட வாய்ப்புகள் தர இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பின்வாங்குவதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருப்பதாவது: மீ டூ புகார் கூறுவதற்கு முன் எனக்கு வாரத்தில் 2 பட வாய்ப்பு கன்னட சினிமாவிலிருந்து வரும். இப்போது வருவதில்லை. காரணம், மீ டூ புகார் கூறியதுதான். என்னை தங்களது படத்திற்கு தேர்வு செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். கன்னட சினிமா என்றில்லை, தென்னிந்திய சினிமாவிலும் இதுதான் நிலை. இது எனக்கு கவலை அளித்தாலும் சோர்ந்துவிடவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலைக்கு நான்…

அமலாபாலுடன் கல்யாணம் விஷ்ணு விஷால் ஆச்சர்யம்

விஷ்ணுவிஷால், அமலாபால் இருவரும் ராட்சசன் படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் படம் வெளியாவதில் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வரும் 21ம் தேதி படம் வெளியிட முடிவானது. இதுகுறித்து விஷ்ணு விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் கதையை 2 வருடத்துக்கு முன்பே கேட்டிருந்தேன். எழில் இயக்கத்தில் வெளியான வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை, காமெடி டிராக் எழுதிய செல்லா அய்யாவு என்னிடம் சிலுக்குவார் பட்டி சிங்கம் கதை கூறியிருந்தார். ஜாலியான, காமெடி கதையாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ரெஜினா ஹீரோயின். கெஸ்ட் ரோலில் ஓவியா நடித்துள்ளார். லெயன்…

கலைஞர் நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக சேனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று பிற்பகலில் விமானம்…

சிவகார்த்திகேயனின் கனவு பலிக்குமா..? சொந்தப் படம் ரிலீஸ் !

நடிகர் சிவகார்த்திகேயன் அவர் பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, ‘கனா’ என்ற படத்தை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தயாரித்து இருக்கிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்து இருக்கிறார்கள். படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்களில் ஒருவரான கலையரசு பேசும்போது கூறியதாவது:- கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால்தான் அது தயாரிப்பாளருக்கு லாபகரமாக அமையும். அந்த வகையில், இந்த படத்தின் டைரக்டர் எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த ‘கனா’ சத்யராஜ் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜை எல்லோரும் கட்டப்பா என்றுதான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆனபின், அவரை முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என்று நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல்,…

அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் முதன்முதலாக அஜித்குமாரை வைத்து ஒரு தமிழ் படம் தயாரிக்க இருக்கிறார். எச்.வினோத் டைரக்டு செய்கிறார். ‘பிங்க்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை. இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை…

தமிழக மக்களின் குரலாக இருந்தவர் மு.கருணாநிதி ராகுல் புகழாரம்

கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் இரண்டு பக்கம் உள்ளது. மக்களின் குரலை மற்றும் தன் குரலை மக்களுக்காக பிரதிபலிப்பது. தலைவர் கருணாநிதி தமிழக மக்களின் குரலாகவே வாழ்ந்தவர். மக்களுக்காக வாழ்ந்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர். கலைஞர் முழுவாழ்க்கையையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர். நீங்கள் கலைஞரை நினைவில் கொண்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். அவருடைய நினைவுகளை கொண்டிருப்பீர்கள். நான் கலைஞர் அவர்களை இரண்டாவது முறையாக சந்தித்ததை நினைவுகூறுகிறேன். அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது கிடையாது. அவருடைய வீடு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு அதிகமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன். பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் தலைவரின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடுவை போன்று நானும் நினைத்தேன். ஆனால்…

சராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன் 

உலக நாடுகளின் மொத்த கடன் அளவு இதுவரை இல்லாத வர லாற்று உச்சத்தை அடைந்துள்ள தாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது. மொத்த கடன் 184 லட்சம் கோடி டாலர். இவற்றில் பாதி கடனுக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பங்கு வகிக்கின்றன. உலக நாடுகளின் கடன் அளவை அவ்வப்போது ஐஎம்ஃஎப் கணக்கிட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 182 லட்சம் கோடி டாலராக இருந்த உலகக் கடன் தற்போது 184 லட்சம் கோடி டாலராக உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. இந்த கடன் அளவானது, 2017ல் உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியின் மதிப்பில் 225 % ஆகும். சராசரியாக ஒரு தனிமனிதனின் கடன் 86 ஆயிரம் டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பில் 60 லட்சத்துக் கும்…

தாமதமானது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

டிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு, 2019-ல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ படத்துக்காக இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா. தற்போது, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். அப்பணிகள் முடிந்து, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க, அரங்கும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார். இப்பணிகள்…

கோயில் பிரசாத சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 13

கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகரில் உள்ள சுலாவதி கிராமத்தில் இருக்கும் கிச்சுகட்டி மாரம்மா கோயில் பிரசாதம் சாப்பிட்டவர்களில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. பிரசாதம் உண்டு பாதிக்கப்பட்டவர்களில் 66 நோயாளிகள் தனியார் மருத்துவமனையிலும் 28 பேர் கே.ஆர்.மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சலம்மா, மகேஸ்வரி ஆகிய நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிர்காப்புக் கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வரும் 6 நோயாளிகளும் உயிருக்குப் போராடி வருகின்றனர். சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்…

கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைத்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை சரியாக மாலை 5.18 மணிக்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணா சிலையும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன்…