தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை

வழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

இதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்டபோது. ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.

—————

தேர்தல் எமக்குப் பிரச்சினை அல்லவென்றும் அரசியலமைப்புக்கு அமையவே அரசாங்கம் இருக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்: தேர்தல் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பாராளுமன்றத்தில் பேசிய பின்னரே முடிவெடுக்க முடியும். முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடத்துவது என்பதிலே பிரச்சினையுள்ளது.தற்போதுள்ள நிலையில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அங்கு சட்டப் பிரச்சினை எழும் நிலை காணப்படுகிறது.

அவ்வாறான நிலையில் தெரிவாகும் அரசுக்கு எதிராக எவரேனும் ஒருவர் சட்டப்பிரச்சினை யை எழுப்ப முடியும். பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை கூடும் போது பெரும்பான் மையை நிரூபித்து ஐ.தே.க முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க வேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியுள்ளதாக சபாநாயகர் அறிவித்திருப்பதால் அமைச்சரவை செயலிழந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமரால் நிதி ஒதுக்க முடியாது என்ற பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்துள்ளார். அரசாங்கம் இந்தச் சவாலையும் ஏற்று வெற்றி கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திலும், நாட்டிலும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பலம் உள்ளது.

இந்நிலையில் எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்க நாம் தயார். பாராளுமன்றத்தையும், மக்களையும் குழப்புவதை விடுத்து ஜனநாயக வழியில் பெரும்பான்மையை நிரூபிப்பதே சிறந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதே எமது ஒரே நோக்கமாகும். இதற்காக இன்று முதல் எமது ஜனநாயகப் போராட்டம் விரிவடையும். இதற்காக கிராமிய மட்டத்திலிருந்து மக்களை விழிப்புணர் வூட்டவுள்ளோம்.

இதில் நாம் கட்சிபேதம் பார்க்க மாட்டோம்.கிராமங்கள், நகரங்கள், கடைத்தெருக்கள்,மத வழிபாட்டுத் தலங்களென சகல இடங்களிலும் மக்களைச் சந்தித்து பாராளுமன்ற ஜனநாயகத்தை வெற்றிகொள்ள ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

————–

Related posts