யாழ்ப்பாணத்தில் விஜய் நடித்த சர்க்கார் சரவெடி

யாழ்ப்பாணத்தில் இப்போது எல்லா திரையரங்குகளிலும் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிக வருமானம் வருவதால் தீபாவளிக்கு வந்த மற்றைய படங்களுக்கு திரையரங்குகள் இல்லாமல் போய்விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அனைத்து திரையரங்குகளும் ரசிகர்கள் அலை மோதுகிறார்கள், முன்னரே பதிவு செய்து எடுத்ததால் பிலிம் சிட்டியில் 500 ரூபா டிக்கட்டுடன் பார்க்க முடிந்தாக ரசிகர் ஒருவர் கூறினார்.

நுழைவு சீட்டுக்கள் விலை கூட்டி விற்கப்பட்டதா என்ற கேள்விக்கு அந்த இளைஞரால் பதிலளிக்க முடியவில்லை.

பாலாபிஷேகம், பியர் அபிஷேகங்கள் அதிகம் இல்லை என்று கூறிய அவர் நேற்று விஜய் ரசிகர் மன்றம் மக்களுக்கு தென்னம் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கியதாக தெரிவிக்கிறார்.

படம் எப்படியென்று கேட்டபோது சரவெடி என்றார். மேலும் அரசியல் காட்சிகளும் கருத்துக்களும் வருவதால் பொழுது போகிறது என்கிறார்.

ஆனால் படத்தின் பிற்பகுதி போரடிக்கிறது என்று தமிழகத்தில் இருந்து வரும் தி இந்து பத்திரிகை எழுதியுள்ள கருத்தளவுக்கு அவரால் ஆழமாக போக முடியவில்லை.

படம் பார்க்க வேண்டுமென்ற பதட்டம், ஜன நெரிசல்வேறு இதற்குள் போய் நுழைந்து ஒரு படத்தை பார்த்தால் அதில் குறைகள் தெரியாது.

வெளியே வரும்போது ஒரு கெத்து.. படத்தை பார்க்கும் மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றது போன்ற உணர்வே இருக்கும்.

யாழில் உள்ள வேறொரு தியேட்டரை சொல்லி அங்கு போனால் மதுபானம் அருந்தி இளைஞர்கள் சண்டை போடுவார்கள், கூச்சத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்.

தமிழகத்தில் சர்க்கார் படத்திற்கு என்றுமில்லாதளவுக்கு பணத்தை கொட்டி கட்டவுட் வைத்துள்ளனர். அது போல இல்லாவிட்டாலும் யாழ்ப்பாணத்திலும் கட்டவுட்கள் உண்டு.

எப்படியோ சர்க்கார் விட்டபணத்தை உழைத்து கலாநிதி மாறன் திரைக்கு வர முன்னரே பல கோடிகளை பார்த்துக் கொண்டு, படத்தை தேனாண்டாள் பிலிம்சிற்கு விற்றுவிட்டு விடை பெற்றுவிட்டார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

சர்க்கார் உழைத்துவிட்டது.. படம் நல்லதா கெட்டதா என்று பார்க்க இங்கு யாருக்கும் நேரமும், தேவையும் மூளையும் இருக்க வேண்டுமே என்பது அந்த யாழ். இளைஞர் எழுப்பிய கேள்வி.

மலேசியாவில் ஓர் இளைஞர் படம் நன்றாக இருக்கிறது என்கிறார்.

அலைகள் 06.11.2018

Related posts