ஜனாதிபதி மாளிகையில் தீபாவளி விழா

நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட திபாவளி விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட தீபாவளி விழா ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தீபாவளி என்பது சமூக நீதி நிலைநாட்டபட்ட தினமாகும் எனக் குறிப்பிட்டார்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கப் பெறவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் நல்லிணக்கமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விழா பல்வேறு கலாசார அம்சங்களைக் கொண்டிருந்ததோடு ஜனாதிபதி அனைத்து இந்த பக்தர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் உட்பட பெரும் எண்ணிக்கையான இந்து பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts