முன்னாள் அமைச்சர் அர்ஜுன கைது

பெற்றோலியக் கூட்டுத்தாபன சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவிடம் நேற்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகளையடுத்து முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுத்தாபன ஊழியர்கள் மீது முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு அதிகாரியை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியரொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நேற்றைய தினம் கூட்டுத்தாபன தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவை கைதுசெய்யக்கோரி கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவந்ததுடன் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

Related posts