ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்

பிரிட்டனைச் சேர்ந்த அமீதிஸ்ட் ரெல்ம் என்ற 30 வயது பெண்மணி தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்து கொண்டுள்ளதாகவும் அதில் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தன் ‘பேய் ஆசை’யை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 ஆவிகளுடன் தான் உடலுறவு கொண்டதாக இந்தப் பெண் கூறியதும் பலருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவர் தன் எதிர்காலக் கணவருக்குத் தெரியாமல் 20 ஆவிகளுடன் தான் உறவு கொண்டதாகத் தெரிவித்தது பலருக்கும் தூக்கிவாரிப்போட்டது. இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்தா ஆவியுடன் தான் விமானத்தில் உறவு கொண்டதாகவும் அவர் சமீபத்தில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது திருமண ஆசையை அந்த ஆவி வெளிப்படுத்தியது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அமீதிஸ்ட் ரெல்ம் கூறியதில் பலரும் வெலவெலத்துப் போயுள்ளனர்.…

தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கூலிப்படையால் கொலை செய்பவர்களால் கொல்லப்பட்டதாக சௌதி கூறுகிறது. ஆனால், சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்று சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா ஒப்புக்கொண்டுள்ளார். சௌதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும்…

மீண்டும் ஒருமுறை எனக்கு வாய்ப்பு – டக்ளஸ் தேவானந்தா

முறைகேடுகள் இன்றி மக்களின் எரியும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (31) தனது அமைச்சில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகி இருப்பதுடன் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும். மக்களுக்கு…

இலங்கை தனது துறைமுகத்தின் இறைமையை இழந்துவிட்டது

இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால் கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அவர்கள் தங்கள் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. ஈராக் மற்றும் பாகிஸ்தான் 90-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 91-வது இடத்திலும் உள்ளன. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் போக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுடைய விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதற்காக மற்ற நாடுகள் பெற்றுள்ள சலுகைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்தியா 75-வது இடத்திலிருந்து 66-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து இந்தியர்கள் இனி 66 நாடுகளுக்கு விசா இன்று பயணம் செய்யலாம்.

சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள்

சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள மாரிமுத்து இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் வைரமுத்து–சின்மயி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாரிமுத்து அளித்த பேட்டியில், ‘‘ஜவுளி கடையில் திருடினார் என்று கூறினால்தான் புகார். பெண்ணை அழைப்பது எப்படி தவறாகும். வைரமுத்து ஒரு ஆண். அவர் ஒரு ஆணை அழைத்தால் தவறு. பெண்ணை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியே சொல்வார்கள். இந்த பாலியல் விவகாரத்தில் வைரமுத்து புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டு ஏராளம்’’…

‘சர்கார்’ படத்துக்கு தடை விதி : உண்ணாவிரதம்

முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த 'தாகபூமி' என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ''ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது 'தாகபூமி' குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் அதை திரைப்படமாக எடுத்துவிட்டு என்னை ஒதுக்கிவிட்டார். எனது கதையைப் பயன்படுத்தியது குறித்து ஏ.ஆர். முருகதாஸுக்கு எதிராக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 4 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். எனது கதையைப் பயன்படுத்தி 'கத்தி' படத்தின் கதையை…

இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 54 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் எதிரணியில் இருக்கையில், 16 பேர் கொண்ட தமிழ் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுதும் அதே வாதத்தின் பிரகாரம் எதிரணியில் ஐ.தே.க தொகை கூடுதலாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி மாற்றப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேமதாஸவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதும் டியூ குணசேகர கோப் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போதும் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கமைய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.சிலர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். வரலாற்றில் முதற் தடவையாக பல சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் அமைச்சு…

மன்னார் எலும்புக்கூடுகள் புளோரிடா போகின்றன

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98 வது நாளாகவும் இன்று (31) தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி, இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக இன்றைய தினத்துடன் 98 வது தடவையாக மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்…

மகிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும் பதவியேற்றார் ?

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். சுனாமி ஏற்பட்ட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் சீர்படுத்த முடிந்ததாக அவர் கூறியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் சரியான திட்டமிடல் ஊடாக தான் நிதியமைச்சர் என்ற வகையில் செயற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று நிதியமைச்சு பல சவால்களை எதிர்கொள்ள இருப்பதாகவும், வரி செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதாரம் சம்பந்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer)…