இனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன் புதிய கட்சி

இனவாதத்தை தூண்டும் நோக்கில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் அவரினால் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரை மொட்டில் உள்ள சில சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தான் மதிப்பதாகவும் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தன்னுடைய கட்சிக்கு வந்தால் உயர்ந்த மரியாதையுடன் அவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமை நிச்சியமாக தனக்கு சாதகமான ஒரு நிலமை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அதனை தன்னால் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேர்வின் சில்வா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு 3 வாக்குகளேனும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts