கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

காலம் சென்ற அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களுக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள நோரகேத கலாச்சார இல்லத்தில் எதிர்வரும் 21ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிறு மாலை அஞ்சலி நிகழ்வொன்று நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிகழ்வை டென்மார்க் தமிழ் கலைஞர்கள் சங்கமும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

விழாவை எவ்வாறு நடத்துவதென்ற பூர்வாங்க கலந்துரையாடல் இன்று கேர்ணிங் நகரத்தில் உள்ள பிறண்கோ பாடசாலையில் இடம் பெற்றது.

கவிஞர் பொன்னண்ணாவிற்கான அகவணக்கத்துடன் கூடிய நிகழ்வை கலைஞர் சங்கத்தின் தலைவர் திரு. மா. தேவன் ஆரம்பித்து வைத்தார்.

அத்தருணம் இரு அமைப்புக்களில் இருந்தும் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்று எவ்வாறு நிகழ்வை வடிவமைக்கலாம் என்று தத்தமது கருத்துக்களை முன் வைத்தார்கள்.

அஞ்சலி நிகழ்வில் பொன்னண்ணாவின் பணிகள் ஏழு தலைப்புக்களில் நினைவுகூருவதென முடிவு காணப்பட்டது.

01. பொன்னண்ணாவும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும்

02. இறுதிக் கிரியை நிகழ்வுகளும் அதற்கான பொன்னண்ணாவின் சமுதாயப்பணிகளும்.

03. பொன்னண்ணா கவிதைகள்

04. பொன்ணண்ணாவிடம் கற்க வேண்டிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும்

05. டென்மார்க் தமிழ் படைப்பிலக்கியத் துறையில் அவர் ஆற்றியிருக்கும் பங்கும் பணியும்

06. பொன்னண்ணாவிடம் கண்ட மறக்க முடியாத அனுபவங்கள்

07. பொன்னண்ணா குடும்பத்தினரும் அவரும் என்ற ஏழு தலைப்புக்களில் முக்கிய உரைகள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இணைய விரும்புவோர் தமிழ் கலைஞர் சங்கம், சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை ஆகியவற்றின் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்களுடைய முக நூலின் வழி தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்த மேலதிக விபரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அலைகள் 30.09.2018

Related posts