டென்மார்க் போலீசார் இரவிரவாக தேடுதல் 11 பேர் கைது

டென்மார்க் தலை நகர்பகுதியில் பொறி கக்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கிப் பிரயோகங்களில் இதுவரை 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இப்பகுதியில் வாழ முடியவில்லை இரவு நேரம் விiயாட்டு பயிற்சிக்கு செல்லும் மகளை இரவு நேரங்களில் வெளியே போகாது நிறுத்தியதுடன், அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற இருப்பதாக ஒரு டேனிஸ் தாய் கூறுகிறார்.

சமூகத்தை காப்பாற்றி நீர்மைத்தன்மை பெற வைப்பது போலீசார் பணி..

இந்த நிலையில் குழு மோதல்களையும் துப்பாக்கிப் பிரயோகங்களையும் நிகழ்த்தியமைக்கு ஏதோ ஒரு வகையில் துணையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தில் போலீசார் பதினொருபேரை கைது செய்துள்ளனர்.

பூட்டிய அறையில் இடம் பெற்ற அடிப்படை விசாரணைகளின் பின்னதாக இவர்களுக்கு 20 தினங்கள் தடுப்புக்காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி முதல் 26ம் திகதி வரை படுகொலை எத்தனம், திருட்டு போன்ற முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் போலீசாருக்கு துப்பாக்கியை காட்டி சரேலென கிறுகி ஓடியதாகவும் பின்னர் தேடுதல் வேட்டையில் கார் ஒன்றின் டிக்கிக்குள் ஒழித்திருந்து பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் வாழும் குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதியான இஸ்லாமிய பின்னணி கொண்ட முகமட் அஸ்லாம் என்பவர், நீதி அமைச்சரையே குறை கூறினார்.

அமைச்சர் தண்டனை, தண்டனை மேல் தண்டனை என்ற திசையிலேயே நீந்திச் செல்கிறார். தண்டனைகளால் குற்றச் செயல்களை குறைக்குறைக்க முடியாது. வன்முறை சார் உளவிலை செம்மை செய்ய வேறு வழிகள் உள்ளன. அது குறித்து அமைச்சர் கடுகளவும் அக்கறைப்படவில்லை என்பது இவருடைய வாதமாக இருக்கிறது.

குற்றச் செயல்களுக்கு கடும் தண்டனை என்பது ஒரு சாரார் கருத்தாகவும்..

சீர்திருத்தம் செய்து சமுதாயத்தை குற்றமற்ற இயங்கியல் நிலைக்கு மாற்றுவது இன்னொரு வழியாகவும் இரு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

இவைகள் ஏற்கெனவே பேசப்பட்டு புரி தேய்ந்த பாதைகள். இவை தவிர அதிரடியான புதிய மூன்றாவது வழி குறித்து அமைச்சரை யாரும் சிந்திக்க தூண்டினார்களா என்பது தெரியவில்லை.

அலைகள் 27.06.2018 வியாழன்

Related posts