85க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா இதுவரை 85க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோர்தானில் உள்ள தனது தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஈரானின் இராணுவத்தின் நிலைகள் மீதும் அதனுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நீண்டதூர பி 1 தாக்குதல் விமானங்கள் உட்பட பல விமானங்கள் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts