வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது

வெளிநாடுகள் செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது.
உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.
முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமற்ற மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாகும்.
முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது.
நமது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காடு இந்திய மொழிகள் சார்ந்த துறைகளில் இருந்தே வருகிறது.
பல்துறை திறன்களை வழங்குவதன் மூலம் காலத்திற்கு பொருத்தமான கல்வியை தருவதே புதிய கல்விக் கொள்கை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக சென்று இருந்தார்.
இந்த நிலையில், தமிழக கவர்னர் மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

——-

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார்

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை கவர்னர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார்.

அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கவர்னர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

சிதம்பரம் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கவர்னர் இப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன் முதல்-அமைச்சர் மீதான விமர்சனம் பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்-அமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு கவர்னர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.

2021-22ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை.

அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts