சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ஐசிஏஎப்) சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்த விழாவில் சிறந்த தமிழ் படமாக ‘கிடா’ தேர்வு செய்யப்பட்டு ரூ.1லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

இதர விருதுகள்:

இரண்டாவது சிறந்த தமிழ் படம் – ‘கசட தபற’

சிறந்த நடுவர் விருது – ‘இரவின் நிழல்’

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (‘மாமனிதன்’), பூ ராமு (கிடா)

சிறந்த நடிகை – சாய் பல்லவி (‘கார்கி’)

சிறந்த ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன் (‘இரவின் நிழல்’)

சிறந்த ஒலி அமைப்பு – பிஜே ரூபன் (‘நட்சத்திரம் நகர்கிறது’)

சிறந்த படத்தொகுப்பு – பிரேம் குமார் (‘பிகினிங்’)

சிறப்பு விருது – ‘ஆதார்’

Related posts