ஓய்வூதியம் உயர்வு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்பு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்‌ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன். இவர்கள் தமிழக தியாகிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள்.

தியாகிகளைப் போற்றும் மண் தமிழகம். அந்த வகையில், விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் மேலும் ரூ.ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.9000 மாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts