இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசு அவதானம்

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.

அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.

எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

Related posts