‘மிமி’ ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்?

மிமி’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. லட்சுமண் உடேகர் இயக்கத்தில் கீர்த்தி சனோன், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'மிமி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினார்கள். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது.இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. 'Mala Aai Vhhaychy!' என்ற மராட்டிய மொழி படத்தின் இந்தி ரீமேக்தான் 'மிமி' என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு வெளியான மாரட்டிய மொழி படத்தை 2013-ம் ஆண்டு 'வெல்கம் ஒபாமா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.…

சுபாஷ்கரன் – ஷங்கர் சந்திப்பு: முடிவுக்கு வந்தது சர்ச்சை

சுபாஷ்கரன், ஷங்கர் இருவரும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, 'இந்தியன் 2' படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது. தற்போது தெலுங்கில் ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். அவருக்கு எதிராக சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் 'இந்தியன்…

பொன்னியின் செல்வன் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு..

'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களுக்கான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விக்ரம். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகரின் காட்சிகளாக முடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜெயம் ரவி இந்தப் படத்தின் அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். தற்போது விக்ரமும் அவருடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார். இதில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். இதனை விக்ரம் தரப்பு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டதால் 'கோப்ரா' படத்தின் இறுதிக்கட்டப்…

தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது

தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது என்று இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'ஹோம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். தற்போது 'ஹோம்' பார்த்துவிட்டு இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: "கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்...வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை 'ஹோம்' திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home. மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி…

மீண்டும் ஹாலிவுட்டுக்குச் செல்லும் தீபிகா படுகோன்

‘டிரிபிள் எக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். 2017ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘டிரிபிள் எக்ஸ்’ மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்துக்காகத் தயாராகி வருகிறார் தீபிகா. இரண்டு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இருவருக்கிடையே ஏற்படும் காதலைப் பற்றிப் பேசும் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை எஸ்டிஎக்ஸ் பிலிம்ஸ் மற்றும் டெம்பிள் ஹில் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தீபிகாவின் கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இதுகுறித்து தீபிகா படுகோன் கூறியுள்ளதாவது: ''உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கான கதைகளைத் தயாரிப்பதற்காகவே கா புரொடக்‌ஷன்ஸ் உருவாக்கப்பட்டது. எஸ்டிஎக்ஸ் பிலிம்ஸ் மற்றும் டெம்பிள் ஹில் புரொடக்‌ஷன்ஸ்…

ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த, சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர, கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த காரை எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டியுள்ளார் என்றும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதி விபத்திற்குள்ளானது என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.