சிறிலங்கா அணி ஒலிம்பிக் போன கூத்து

சிறிலங்கா அழி வீரர்களுடைய இலக்கம் சட்டைக்கு குத்தும் சாதாரண பின்களினால் குத்தப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் அம்பலமாகியுள்ளது. சிறிலங்கா ஒலிம்பிக்கில் எதுவும் எடுக்காது வெறுங்கையுடன் திரும்புவதும் இத்தகைய செயல்களாலா என்ன கேள்வி எழுந்துள்ளது.
இதை இலங்கையின் தமிழ் ஊடகங்கள் பயத்தில் சுட்டிக்காட்டவில்லை, சிங்கள ஊடகங்கள் பூசி மெழுகியுள்ளன. நாமல் இப்படி கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலையத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம். சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் உடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது.

என்றாலும் வீர, வீராங்கனைகளில் நடத்தை விதிகளே இதற்கு காரணமாகும். இது தொடர்பில் நாம் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெற்றிக்கொள்வதற்காக குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வீர, வீராங்கனைகளின் மன வலிமையை உறுதிப்படுத்தவும் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இளைஞர், விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts