சீனாவை முந்தி முதல் இடம் பிடித்த அமெரிக்கா

டோக்கியோ ஒலிம்பி பதக்கபட்டியலில் ஆரம்பித்த நாள் முதல் சீனா முதல் இடத்தில் இருந்தது. இன்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்க முதல் இடம் பெற்று உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன, ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த நாள் முதல் சீனா முதல் இடத்தில் இருந்தது. இன்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்க முதல் இடம் பெற்று உள்ளது.

தற்போதைய (12:45) மதியம் நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 6, வெள்ளி 3, வெண்கலம் 4 என மொத்தம் 13 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா தங்கம் 6, வெள்ளி -2, வெண்கலம் 6 என மொத்தம் 14 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

ஒரு வெள்ளியுடன் இந்தியா தரவரிசையில் 25 வது இடத்திலும் உள்ளது.

Related posts